லேடி சூப்பர் ஸ்டார் என்று கூட பார்க்காமல் பங்கமாய் அசிங்கப்படுத்திய விஜய் டிவி.! உங்களுக்கு அவ்வளவு தான் மரியாதை என எச்சரிக்கை விடும் ரசிகர்கள்.!

vijay-tv
vijay-tv

பொதுவாக பொழுதுபோக்காக சினிமா ரசிகர்கள் பலரும் இருக்கிறார்கள் அதேபோல் டிவி நிகழ்ச்சியை விரும்பி பார்க்கும் ரசிகர்கள் கூட்டம் ஏராளம் புதிய புதிய நிகழ்ச்சிகள் மற்றும் புதிய புதிய சீரியல்களை ஒளிபரப்பி மக்களை தன் பக்கம் இழுத்து வருகிறார்கள் தொலைகாட்சிகள். அந்த வகையில் புதிய புதிய நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வரும் தொலைக்காட்சி என்றால் அது விஜய் டிவி தான்.

இந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் தனித்தனி ரசிகர் பட்டாலும் இருந்து வருகிறார்கள் மற்ற தொலைக்காட்சிகளை விட இதில் அதிகமாக நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி ரசிகர்களை கவர்ந்து வருகிறார்கள் அந்த வகையில் ஆடல், பாடல் காமெடி என இந்த தொலைக்காட்சியில் தனித்தனியாக ஒளிபரப்பப்பட்டு வருகிறார்கள்.

அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்களை வைத்து பிக் பாஸ் ஜோடி என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகிறார் அந்த நிகழ்ச்சியில் ராஜூ மற்றும் பிரியங்கா இருவரும் தொகுத்து வழங்கி வருகிறார்கள் இந்த நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று வருகிறார்கள் ரம்யாாா கிருஷ்ணன் மற்றும் டான்ஸ் மாஸ்டர் சதீஷ். இந்த நிலையில் நடிகை ஆர்த்தி லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் திருமண கெட்டப்பை போட்டுக்கொண்டு  ரீ கிரியேட் செய்துள்ளார்.

அப்பொழுது அவர் ஆடி முடிந்தவுடன் முகத்தை திறந்தவுடன் முகம் முழுவதும் கரி பூசிக்கொண்டு கருப்பான பெண்ணாக காட்சியளிக்கிறார் அதை பார்த்து பலரும் சிரிக்கிறார்கள் அது மட்டும் இல்லாமல் அவரின் உருவத்தை கேலி செய்யும் விதமாக யானையின் சட்டத்தை பின்னணி இசையில் போட்டு  அவரை அசிங்கப்படுத்துகிறார்கள். இதை பார்த்த நயன்தாராவின் ரசிகர்கள் நயன்தாராவின் திருமண நிகழ்ச்சியை கூட இப்படியா அசிங்கப்படுத்துவது என நயன்தாரா ரசிகர்கள் கோபத்துடன் இருக்கிறார்கள்.

அதுமட்டுமில்லாமல் ஒரு சில ரசிகர்கள் உங்களுக்கு அவ்வளவு தான் மரியாதை பிரபலங்களை அசிங்கப்படுத்துவது ஒரு நிகழ்ச்சியா என கண்டமேனைக்கு திட்டி தீர்த்து வருகிறார்கள் இந்த நிகழ்ச்சி மட்டுமல்லாமல் கலக்கப்போவது யாரு காமெடி சாம்பியன்ஸ் சிரிச்சா போச்சு என பல நிகழ்ச்சிகளில் பிரபலங்களை அசிங்கப்படுத்தி வருகிறார்கள். இதற்கு பல பிரபலங்களும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள் ஆனால் எதையும் பெரிதாக கண்டு கொள்ளவில்லை விஜய் தொலைக்காட்சி.

ஆனால் இந்த முறை நயன்தாராவை கேலி செய்யும் விதமாக இந்த நிகழ்வு நடைபெற்றதால் நயன்தாரா ரசிகர்கள் மிகப்பெரிய கோபத்திலும் இருக்கிறார்கள் அதுமட்டுமில்லாமல் இதனை சர்ச்சையாக சமூக வலைதளத்தில் வெளியிட்டு வருகிறார்கள்.