வெண்ணிலாவை ஆள் வைத்து கடத்திய அபி.! சூர்யா செய்த தரமான சம்பவம்.

kaateukenna veli
kaateukenna veli

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் காற்றுக்கென்ன வேலி சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல அமோக வரவேற்பைப்பெற்று வருகிறது. கல்லூரி வாழ்க்கையை மையப்படுத்தி காட்டுவதால் இளைஞர் மத்தியில் நல்ல ஆதரவை கொடுத்து வருகிறார்கள். டிஆர்பி=யில் சூப்பர் ஹிட் சீாியலாக வளர்ந்து வருகிறது.

இதனை தொடர்ந்து வெண்ணிலாவின் அப்பா கல்லூரிப்படிப்புக்கு அனுமதிக்காத போது வெண்ணிலாவின் கல்லூரி பேராசிரியரான சாரதா வெண்ணிலாவின் படிப்பிற்கான அனைத்து உதவியும் செய்து வந்திருந்தார்.சாரதாவின் உதவியின் மூலம் சென்னை கல்லூரியில் சேர்ந்து படித்து வருகிறார் வெண்ணிலா.

இந்நிலையில் வெண்ணிலா சென்னை கல்லூரியில் படித்து வந்தபோது அந்த கல்லூரி சாரதாவின் கல்லூரி தான் என்று வெண்ணிலாவுக்கு தெரியவந்தது அதைத்தொடர்ந்து ஆரம்பத்தில் சூர்யா வெண்ணிலாவிடம் வெறுப்பை காட்டி வந்தார். மேலும் வெண்ணிலா செய்த செயல்களை பார்த்த சூர்யா காதல் வலையில் விழுந்தார்.

இதைத்தொடர்ந்து சாரதாவிற்கு உடல்நிலை சரியில்லாததால் சாரதாவை பார்த்துக்கொள்வதற்க்கு சூர்யா வீட்டிற்கு வருகிறார். வெண்ணிலாவுக்கு எதிரியான அபி கடும் கோபத்தில் உள்ளார். அப்போது பேச்சுப் போட்டிக்கு அபியும் வெண்ணிலாவும் கலந்து கொள்கிறார்கள். அபி தோல்வியுற்றார் வெண்ணிலா ஜெயித்து விட்டதால் மேலும் டெல்லிக்கு போய்பேசுவதற்கு வாய்ப்பு கிடைத்தது. அதை தடுப்பதற்கு பல சதித்திட்டங்களை தீட்டி வருகிறார்.

எனவே, அபியின் திட்டத்தினால் வெண்ணிலா மயங்கி ஒரு ஓரத்தில் கிடைக்கிறார். சூர்யா அலைந்து திரிந்து தேடியும் கிடைக்கவில்லை பேச்சுப்போட்டி ஆரம்பமாகிவிட்டது. வெண்ணிலா எங்கு தேடியும் கிடைக்காத நிலையில் அப்போது ஸ்டோர் ரூமில் சூர்யா வெண்ணிலாவை கண்டுபிடித்து மேடையில் பேசுவதற்கு நிறுத்திவிட்டார். அப்போது வெண்ணிலா பேச்சுப் போட்டியில் பேசி அசத்திவிட்டார். விருதும் வெற்றிகரமாக கிடைத்தது.

இந்நிலையில் அபி அவமானத்தில் தலை குனிந்து நிற்கிறார். சூர்யா மிகப்பெரிய பதிலடியாக தான் கொடுத்திருக்கிறார். என்று ரசிகர்கள் சந்தோஷத்தில் இருக்கிறார்கள். மேலும் இனி வரும் எபிசோடுகளில் என்ன நடக்கப் போகிறது என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வருகிறார்கள்.