காற்றுக்கென்ன வேலி என்னும் நாடகத் தொடர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இக்கதை சுவாரஸ்யத்தையும், மக்கள் மத்தியில் அன்பு ரீதியான தாக்கத்தையும் ஏற்படுத்தக்கூடியது. இக்கதை ஒரு பெண் எவ்வாறு பல தடைகளைத் தாண்டி ஒரு கல்லூரியில் கல்வி கற்கிறார் என்பதை மையமாகக் கொண்டது.
இக்கதை விஜய் தொலைக்காட்சியில் மிக அதிக மக்களால் விரும்பி பார்க்கப்படும் ஒரு நாடக தொடராக மாறியுள்ளது. காற்றுக்கென்ன வேலியில் உள்ள நிறைய சின்னத்திரை நடிகர் மற்றும் நடிகைகள் அவ்வப்போது நாடகக்குழு மாற்றிக்கொண்டே இருக்கும் , ஆனாலும் அதையெல்லாம் தாண்டி இந்த நாடகமானது ரசிகர்கள் மத்தியில் ஒரு நல்ல பெயர் பெற்ற நாடகமாகும்.
இந்த நாடகத்தில் வெண்ணிலா கதாபாத்திரத்தில் பிரியங்கா குமார் என்பவர் நடித்து வருகிறார், இந்த நாடகம் இளைஞர்களால் மிகவும் விரும்பப்படும் நாடகமாகும் ஏனென்றால் வெண்ணிலா தான் பயிலும் கல்லூரியின் பேராசிரியரான,மேலும் கல்லூரியின் உரிமையாளரான சூரியா என்பவரை காதல் செய்து வருகிறார்.
தற்போது வெளியான ப்ரோமோவில் சூர்யாவும் வெண்ணிலாவும் தனியா இருக்காங்க அப்போது சூர்யா வெண்ணிலா கிட்ட “நீ என்ன லவ் பண்ற தான?! “அப்டினு ரொமான்டிகா கேக்குறாரு அதுக்கு வெண்ணிலாவும் ரொமான்டிக்கா ஒரு ஸ்மைல் பண்றாங்க இதை பார்க்கும் போது அவ்வளவு அழகா இருந்தது.
மேலும் ரசிகர்கள் எல்லாம் வெண்ணிலா லவ்வு ஒத்துக்க மாட்டாளா அப்படின்னு சொல்லி ரொம்ப எமோஷனலா அந்தப்ரோமோவ ரசிக்கிறாங்க. ரசிகர்களோட ஆசை ஒன்னே ஒன்னுதான் வெண்ணிலா தன்னோட லவ்வ சூர்யா கிட்ட சொல்லிடனுனு நினைக்கிறார்கள். எப்படியும் வரப்போற நாடக காட்சிகள் மிக சுவாரஸ்யமாக இருக்கும் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.