விஜய் டிவி ஒதுக்கிய சீரியலுக்கு ஆதரவளிக்கும் ரசிகர்கள்.! நெகிழ்ச்சியில் சின்னத்திரை நடிகர் நடிகைகள்.!

vijay tv
vijay tv

விஜய் தொலைக்காட்சியில் மதிய வேளையில் ஒளிபரப்பப்பட்டு வரும் ஒரு நாடகத் தொடர் தான் காற்றுக்கென்ன வேலி, இந்த நாடகம் இளைஞர்களிடையே மிக அதிக தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது, ஏனெனில் இந்த நாடகத்தில் வரும் கதாபாத்திரங்களான வெண்ணிலா மற்றும் சூர்யா என்பவர்களுக்கு இடையில் ஏற்படும் சொல்லமுடியாத காதலை இருவரும் ஒருவருக்கு ஒருவர் சொல்லிக் கொள்ளமாட்டார்கள்.

ஆனால் நாடகம் பார்க்கும் போது அவர்கள் இருவரும் காதலித்து வருகிறார்கள் என்று சொல்லும் அளவிற்கு அவ்வளவு ரொமான்டிக்காக இருக்கும், மேலும் வெண்ணிலா தன்னுடைய காதலை எவ்வாறு சூர்யாவிடம் சொல்லப்போகிறார் என்று ஆவலுடன் எதிர்பார்ப்புடன் சுவாரசியமாக சென்றது நாடகத் தொடர்.

இக்கதை ஒரு பெண் எவ்வாறு பல தடைகளைத் தாண்டி ஒரு கல்லூரியில் கல்வி கற்கிறார் என்பதை மையமாகக் கொண்டது. காற்றுக்கென்ன வேலியில் உள்ள நிறைய சின்னத்திரை நடிகர் மற்றும் நடிகைகள் அவ்வப்போது மாற்றிக் கொண்டே இருக்கும் நாடகக்குழு, ஆனாலும் அதையெல்லாம் தாண்டி இந்த நாடகம் ஆனது ரசிகர்கள் மத்தியில் ஒரு நல்ல பெயர் பெற்ற நாடகமாகும்.

இந்த நிலையில்தான் சமீபத்தில் நடந்த விஜய் டெலிவிசன் அவார்ட் நிகழ்ச்சிகள் எந்த ஒரு விருதையும் பெறாத இந்த நாடகம் மதிய வேளையில் ஒளிபரப்பப்படும் நாடகங்களில் முதலிடத்தை பிடித்துள்ளது, டிஆர்பி ரேட்டிங்கிலும் முதலிடத்தை பிடித்து வருகிறது.

இந்நிலையில் ரசிகர்கள் விஜய் தொலைக்காட்சியை மறைமுகமாக தொடர்பு கொண்டு விஜய் டெலிவிஷன் அவார்டு நிகழ்ச்சிகள் நீங்கள் செய்தது தவறு, ஒவ்வொரு நாடகத்தின் சின்னத்திரை நடிகை மற்றும் நடிகர்களின் திறமையை ஊக்குவிக்க வேண்டும் என்று கூறுகிறார்கள்.காற்றுக்கென்ன வேலி நாடக தொடர் விஜய் டெலிவிஷன் அவார்ட் நிகழ்ச்சிகள் எந்தவித விருதையும் பெறாத நிலையில் தற்போது முதலிடத்தைப் பிடித்து மக்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்திஉள்ளது.