விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஏராளமான சீரியலுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. மேலும் தொடர்ந்து இளசுகளின் மத்தியில் பிரபலமடைய வேண்டும் என்பதற்காக காதல், ரொமான்ஸ் காட்சிகள் அதிக அளவில் இடம் பெற வேண்டும் என்பதில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர் அப்படி தற்பொழுது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியல் தான் காற்றுக்கென்ன வேலி.
இந்த சீரியலில் நடித்து வரும் அனைத்து கேரக்டர்களுக்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அதிலும் முக்கியமாக கதாநாயகன் சுவாமிநாதன் மற்றும் கதாநாயகி பிரியங்கா ஆகிய இருவருக்கும் தனி ரசிகர் பட்டாளம் இருந்து வருகின்றனர். கதாநாயகன் சுவாமிநாதன் சூர்யா என்ற கேரக்டரிலும், கதாநாயகி பிரியங்கா வெண்ணிலா என்ற கேரக்டரிலும் நடித்து வருகின்றார்கள்.
இவ்வாறு இந்த சீரியலுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருவதனால் டிஆர்பியில் முன்னணி வகித்து வருகிறது. இப்படிப்பட்ட நிலையில் விறுவிறுப்பான கதை அம்சத்துடன் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில் நடித்து வரும் பிரபலத்தின் கேரக்டர் திடீரென மாற்றப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது இந்த சீரியலில் முக்கிய கேரக்டரான மீனாட்சி கதாபாத்திரம் மாற்றப்பட்டுள்ளது மீனாட்சி கேரக்டர் தான் இந்த சீரியலின் வில்லியாக இருந்து வரும் நிலையில் மீனாட்சி கேரக்டரில் நடித்து வந்த வீனா வெங்கடேஷ் இந்த சீரியலில் இருந்து விலகிய நிலையில் இவருக்கு பதிலாக சுஜாதா மீனாட்சியாக நடித்து வந்தார்.
இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது சுஜாதாவும் சீரியலில் இருந்து வெளியேறி உள்ள நிலையில் அவருக்கு பதிலாக மீண்டும் வீனா வெங்கடேஷ் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது விரைவில் அவர் நடிக்கும் எபிசோடுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.