வெண்ணிலாவை தனது ரூமுக்கு வரசொன்ன சூர்யா.! அபி செய்த தரமான சம்பவம்.. இன்றைய முழு எபிசோட் இதோ..

KAATRUKENNA-VELI-`18
KAATRUKENNA-VELI-`18

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பல சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது அந்த வகையில் ஆல்டைம் ஃபேவரைட் சீரியல் என்றால் லிஸ்டில் தற்போது காற்றுக்கு என்ன வேலி சீரியலும் இடம்பெற்றுள்ளது.350 எபிசோடுகளை தாண்டியும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது.

பல பிரச்சனை வந்தாலும் அனைத்தையும் தள்ளி விட்டு தனது படிப்பில் முழு கவனம் செலுத்தி வரும் ஒரு சாதாரண பெண்ணின் கதையை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வரும் சீரியல்தான் காற்றுக்கென்ன வேலி. இந்த சீரியல் முழுக்க முழுக்க ஒரு சாதாரண பெண்ணின் கதையை வைத்து அவன் ஒளிபரப்பாகி வருகிறது.

சீரியலில் ஹீரோவாக சூர்யா என்ற கதாபாத்திரத்தின் சுவாமிநாதனும் ஹீரோயினாக வெண்ணிலா என்ற கதாபாத்திரத்தில் பிரியங்கா குமாரும் நடித்து வருகின்றனர். தற்பொழுது சாரதாவுக்கு துணையாக வெண்ணிவே சூர்யா வீட்டில்தான் இருந்து வருகிறார்.

இருவரும் மனதிற்குள் காதலித்து வந்தாலும் வெளிப்படையாக தற்பொழுது வரையிலும் கூறவில்லை. இந்நிலையில் தற்பொழுது பல பிரச்சனைகளுக்கு பிறகு சாரதாவை தனது அம்மாவாக சூர்யா ஏற்றுக்கொண்டார்.  சாரதாவும் மிகவும் மகிழ்ச்சியில் இருந்து வருகிறார்.

இன்று வெளியாகியுள்ள ப்ரோமோவில் வெண்ணிலா படித்துக் கொண்டிருக்கும் பொழுது ஏதோ புரியவில்லை என்பதற்காக சூர்யாவிற்கு போன் செய்கிறார். சூர்யாவும் எனது ரூமுக்கு வா நான் சொல்லி தரேன் என்று கூறுகிறார். வெண்ணிலா சூர்யா ரூமிற்குள் அபி பார்த்து விடுகிறார்.

எப்படியாவது இவர்களை வீட்டில் சிக்க வைக்க வேண்டும் என்பதற்காக திருடன் திருடன் என்று கத்துகிறார். உடனே குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவரும் வந்து விடுகிறார்கள். பிறகு சூர்யாவின் பெரியம்மா வந்து சூர்யாவின் ரூமில் யாராவது இருக்கிறார்களா என்று பார்க்கிறார்.  சூர்யா வெண்ணிலாவை ட்ரெஸ்ஸிங் டேபிளுக்குல் ஒலிய வைத்திருக்கிறார்.

அதனை சூர்யாவின் பெரியம்மா திறக்கப் போகிறார் இதுதான் இன்றைய எபிசோடில் நடக்கவிருக்கிறது வெண்ணிலா சிக்குவாரா,மாட்டாரா என்பது இனிவரும் எபிசோடில் தெரியவரும்.