விஜய் டிவி தொலைக்காட்சி டிஆர்பி யில் நம்பர் ஒன் இடத்தை பிடிக்க தொடர்ந்து பல்வேறு விதமான ரியாலிட்டி ஷோ, சீரியல்களை களம் இறங்குவது வழக்கம் மேலும் அவ்வபொழுது விருது விழா மற்றும் படத்தின் வெற்றி விழா, ட்ரைலர் வெளியீடு, டீசர் வெளியீடு நிகழ்ச்சிகளை கொடுத்து ஓடிக்கொண்டு தான் இருக்கிறது.
இருந்தாலும் ஒரு சில நிகழ்ச்சிகளை standard ஆக வைத்திருக்கிறது. அந்த வகையில் பிக்பாஸ், நீயா நானா போன்ற நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்தி மக்கள் மற்றும் ரசிகர்களை கவர்ந்து இழுக்கிறது. இப்படி விஜய் டிவி தன்னால் என்ன எல்லாம் பண்ண முடியுமோ அதை எல்லாம் பண்ணி அசத்தி வருகிறது.
மேலும் டிரெண்டிங் மற்றும் சோசியல் மீடியாவில் எது வைரலாகிறதோ அதை பயன்படுத்தி டிஆர்பி யில் முன்னேறவும் செய்கிறது விஜய் டிவி. அண்மையில் சோசியல் மீடியாவில் மிகப் பிரபலமாக பார்க்கப்பட்ட ரவீந்தர் மற்றும் மகாலட்சுமி.. இவர்களை வரவைத்து தீபாவளி அன்று ஒரு நிகழ்ச்சியை நடத்திய டிஆர்பி -ல் முன்னேறியது.
இப்பொழுது நயன்தாராவின் வாடகை சர்ச்சை மக்கள் மத்தியில் பெரிய அளவில் வைரலாகி ஒரு வழியாக அந்த பிரச்சனையை முடிவு பெற்றது. அதேபோல சமந்தா நடிப்பில் உருவான யசோதா திரைப்படத்திலும் வாடகை தாய் பிரச்சனையை பெரிய அளவில் காட்டி இருந்தனர். இப்படி இருக்கின்ற நிலையில் விஜய் டிவி தொலைக்காட்சியில் சிறப்பாக ஓடிக் கொண்டிருக்கும் நீயா நானா நிகழ்ச்சி பல்வேறு விதமான கான்செப்ட் வைத்து இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் இந்த வாரம் வாடகை தாய் பிரச்சனையை முன்னெடுத்து உள்ளார்கள். அதற்கான ப்ரோமோ இப்பொழுது வெளிவந்துள்ளது இதற்கு ஆதரிப்பவர்களும், எதிர்ப்பவர்கள் தங்களை கருத்தை கூறி வருகின்றனர். இதை பார்த்த ஒரு சிலர் நடிகை நயன்தாராவை மறைமுகமாக வச்சி செய்கின்றனர் எனவும் கூறி வருகின்றனர்.