மக்கள் பலரும் வெள்ளித்திரைக்கு நிகராக சின்னத்திரைக்கும் முக்கியத்துவம் கொடுத்து வருகின்றன அந்த வகையில் இல்லத்தரசிகளின் பொழுதுபோக்கிற்காக சின்னத்திரை டிவி நிகழ்ச்சிகளில் காலை முதல் இரவு வரை பல சிறப்பு கதைகள் கொண்ட சீரியல்களை ஒளிபரப்ப செய்து வருகின்றன.
அதிலும் ஒரு சில முக்கிய சீரியல்கள் மக்கள் பலரின் ஃபேவரட் சீரியல்கள் ஆகும். அந்த வகையில் விஜய் டிவியில் இரவில் ஒளிபரப்பாகி வரும் பாரதிகண்ணம்மா, பாண்டியன் ஸ்டோர், பாக்கியலட்சுமி, ராஜா ராணி 2 ஆகிய சீரியல்கள் மக்கள் பலரும் விரும்பி பார்க்கக்கூடிய சீரியல்கள் ஆகும்.
அந்த வகையில் இந்த சின்னத்திரை சீரியல்களில் மக்கள் அனைவரும் அதிகம் கண்டுகளித்த சீரியல் எவை என்பதை வார இறுதியில் வெளியாகும் டிஆர்பி ரேட்டிங்கில் நாம் தெரிந்துகொள்ளலாம். அந்த வகையில் ஒவ்வொரு வாரமும் விஜய் டிவி மற்றும் சன் டிவி சீரியல்கள் தான் போட்டி போட்டு டி ஆர் பி யில் முதலிடத்தை வகிக்கும். அப்படி இந்த வாரம் சீரியலுக்கான டிஆர்பி ரேட்டிங் வெளிவந்துள்ளது.
அதில் விஜய் டிவியில் தற்போது முக்கிய கதை களத்துடன் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடர் டி ஆர் பி யில் முதலிடத்தை பெற்று வருகிறது அதனைத் தொடர்ந்து இரண்டாவது இடத்தில் பாரதிகண்ணம்மா மூன்றாவது இடத்தில் பாண்டியன் ஸ்டோர் நான்காவது இடத்தில் ராஜாராணி சீசன் 2 ஐந்தாவது இடத்தில் தமிழும் சரஸ்வதியும் தென்றல் வந்து என்னை தொடும் போன்ற சீரியல்கள் அடுத்த அடுத்த இடத்தைப் பிடித்துள்ளன.
இதே போன்று சன் டிவி டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தில் ஒளிபரப்பாகிய நாட்களில் இருந்து தற்போது வரை முதலிடத்தை சொந்தம் கொண்டாடி வரும் கயல் சீரியல் தற்போது முதலிடத்தில் உள்ளது அதை தொடர்ந்து இரண்டாவது இடத்தில் சுந்தரி மூன்றாவது இடத்தில் வானத்தைப்போல நான்காவது இடத்தில் ரோஜா 5வது இடத்தில் எதிர்நீச்சல் அடுத்தடுத்த இடங்களில் அபியும் நானும், சித்தி-2, பாண்டவர் இல்லம் போன்ற சீரியல்கள் இடம்பிடித்துள்ளன.