சின்னத்திரையில் விஜய் டிவி தொலைக்காட்சியில் மிகவும் பிரமாண்ட நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சி முதல் சீசன் சிறப்பாக வெற்றியடைந்ததை தொடர்ந்து சீசன் சீசனாக நடந்த பட்டு வருகிறது. இந்த சீசன் கடந்த 3 ஆம் தேதி தொடங்கியது.
அதில் பிரியங்கா, இமான், அண்ணாச்சி, ராஜி ஜெயமோகன், பவானி ரெட்டி, ஸ்ருதி, நாடியா ஜாங், அபிஷேக் ராஜா போன்ற 18 பிரபலங்கள் கலந்து கொண்டனர். தற்போது இந்த நிகழ்ச்சி மூன்று நான்கு வாரங்கள் கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இதில் நமீதா மாரிமுத்து, நாடியா ஜாங், அபிஷேக் ராஜா போன்ற மூவர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினர்.
இந்த நிகழ்ச்சி தொடங்கி சில நாட்கள் வரையும் சண்டை சச்சரவு எதுவும் இல்லாமல் அமைதியாக நடந்து வந்தது. ஆனால் தற்போது சில மோதல்கள் நடந்து வருகின்றன. தற்பொழுது இந்த வீட்டில் இருக்கும் போட்டியாளர்கள் அனைவரும் நகர அணி மற்றும் கிராம அணி என இரண்டு அணிகளாகப் பிரிந்து போட்டி போட்டு விளையாண்டு கொண்டு வருகின்றனர்.
இந்த வாரம் மக்களின் ஓட்டு படி இந்த பிக் பாஸ் வீட்டை விட்டு சின்ன பொண்ணு அல்லது அபிநய் இருவரில் ஒருவர் வெளியேருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படி பல திருப்பங்களுடன் ஓடிக்கொண்டிருக்கும் பிக் பாஸ் 5 தீபாவளி ஸ்பெஷலாக பிக்பாஸ் வீட்டினுள் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
அதுபோக தீபாவளியன்று ஒலிபரப்பாகும் எபிசோட் தொடர்ந்து 4 மணிநேரம் ஒளிபரப்பபடும் என்ற செய்தியும் தற்போது கசிந்துள்ளது. இதனைக் அறிந்த பிக் பாஸ் ரசிகர்கள் செம சந்தோஷத்தில் உள்ளனர்.