சின்னத்திரை நடிகை சித்ராவின் தற்கொலையை பற்றி தினமும் ஒரு திடுக்கிடும் தகவல் இணையதளத்தில் வைரலாகி வருகிறது இந்நிலையில் அவர் இறந்த சோகத்தை தற்போது வரை மறக்க முடியாமல் பாண்டியன் ஸ்டோர் பிரபலங்கள் தனது உடன் இருந்த புகைப்படம், வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு தனது வருத்தத்தை தெரிவித்து வருகிறார்கள்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் என்ற சீரியலில் நடிகை சித்ரா நடித்து வந்தார் அவர் நடித்து வந்த போது அந்த சீரியலுக்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்தார்கள் என்பது பலருக்கும் தெரியும்.
ஆனால் தற்போது அந்த சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் பாரதிகண்ணம்மா சீரியல் நடிகை நடித்து வருகிறார் இருந்தாலும் ரசிகர்கள் அதிகம் ஆர்வம் கொண்டு அந்த சீரியலை பார்பதில்லை.
இந்நிலையில் வரும் ஞாயிற்றுக்கிழமை சித்ரா கடைசியாக கலந்து கொண்டுள்ள ஸ்டார்ட் மியூசிக் என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகவுள்ளது.
மேலும் சித்ராவின் அழகிய விஷயங்களை ஒரு வீடியோவாக பதிவு செய்து விஜய் தொலைக்காட்சி அதை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளது.
இந்த வீடியோ காணொளியை பார்த்த ரசிகர்கள் பலரும் இந்த வீடியோ காணொளியை பார்க்கும்பொழுது கண்ணில் கண்ணீர் தானாக வெளிவருகிறது என கூறி வருகிறார்கள்.
இதோ அந்த வீடியோ காணொளி.
— Vijay Television (@vijaytelevision) December 18, 2020