தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற அனைத்து மொழிகளிலும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ஒரே நிகழ்ச்சி பிக்பாஸ் நிகழ்ச்சி தான் இத்தனை சீசன் சீசனாக நடத்திக்கொண்டு வருகின்றனர்.தற்போது தமிழில் இந்த நிகழ்ச்சி நான்கு சீசன்கள் சிறப்பாக முடிவடைந்த நிலையில் ஐந்தாவது சீசன் நாளை மாலை 6 மணிக்கு விஜய் டிவி தொலைக்காட்சியில் பிரம்மாண்டமாக ஒளிபரப்ப இருக்கிறது.
தமிழில் இந்த நிகழ்ச்சியை மக்கள் விரும்பி பார்ப்பார்களா, பார்க்க மாட்டார்களா என ஒரு சில தயக்கங்களுடனே ஆரம்பித்தனர். ஆனால் யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு மக்கள் மனதில் நிகழ்ச்சி நீங்கா இடம் பிடித்துள்ளது.இந்த நிகழ்ச்சிக்கு எண்ணற்ற ரசிகர்கள் உள்ளனர் மற்றும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பாக விளையாடும் பல பிரபலங்களுக்கும் கோடிகணக்கான ரசிகர்கள் உருவாகின அது மட்டும் இல்லாமல் சினிமாவில் பட வாய்ப்புகளும் வந்து குவிந்தன.
கடந்த நான்கு சீசன்கள் நல்ல வரவேற்ப்பை பெற்று முடிவடைந்த நிலையில் தற்போது ஐந்தாவது சீசனின் நிகழ்ச்சியின் படப்பிடிப்புகள் இன்று மாலை தொடங்க இருக்கிறது. இந்த சீசனின் எதிர்பார்ப்புகள் பாலிவுட் சினிமாவில் மிகப்பெரிய அளவில் உள்ளது.
இந்த சீசனில் விஜே பிரியங்கா, ஷகிலா மகள் மிலா, இமான் அண்ணாச்சி, கோபிநாத் ரவி, சன் டிவி நியூஸ் ரீடர் கண்மணி போன்ற 16 பிரபலங்கள் கலந்து கொள்ள இருக்கின்றனர். நான்கு சீசன்கள் முடிவடைந்த நிலையில் தொடர்ந்து ஐந்தாவது சீசனையும் கமல்ஹாசன் தொகுத்து வழங்க இருக்கிறார்.
ஒவ்வொரு முறையும் பிக் பாஸ் வீடு சில ஒரு மாற்றங்கலுடன் காணப்படும் அது போல் இந்த முறையும் பல மாற்றங்கள் இருக்கின்றன. அந்த பிரம்மாண்ட வீட்டின் செட் புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளது. இதோ அந்த புகைப்படம்.