டல்லடிக்கும் சீரியலை முடிவுக்கு கொண்டு வந்த விஜய் டிவி.! அதுக்கு பதில் இனிமேல் இந்த என்டர்டெயின்மென்ட் நிகழ்ச்சி தான்..

vijay-tv-serial
vijay-tv-serial

தற்பொழுது உள்ள அனைத்து தொலைக்காட்சிகளும் போட்டி போட்டுக் கொண்ட ஏராளமான சீரியல்களை அறிமுகப்படுத்தி வரும் நிலையில் விஜய் டிவி மற்ற அனைத்து தொலைக்காட்சிகளையும் ஓவர் டேக் செய்ய வேண்டும் என்பதற்காக புதிய என்டர்டைன்மெண்ட் நிகழ்ச்சிகளை அறிமுகப்படுத்தி வருகிறது மேலும் இதனால் தற்பொழுது விஜய் டிவி மற்ற அனைத்து தொலைக்காட்சிகளுக்கும் கடும் போட்டியாக திகழ்ந்து வருகிறது.

அதாவது விஜய் டிவியில் தொடர்ந்து ஏராளமான குடும்ப சீரியல்கள் ஒளிபரப்பாகி வரும் நிலையில் புத்தம் புது குடும்ப சீரியல் பாரதிதாசன் காலனி இந்த சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது சமீபத்தில் மிகவும் பிரம்மாண்டமாக துவங்கப்பட்டது ஆனால் இந்த சீரியல் மதிய நேரத்தில் ஒளிபரப்பாகி வருவதால் பெரிதாக ரசிகர்கள் இதனை பார்ப்பது இல்லை.

மேலும் இந்த சீரியல் ஒரு காலனியில் தங்கியிருந்தால் எப்படி எல்லாம் இருக்குமோ அதனை அப்படியே மையமாக வைத்து ஒளிபரப்பாகிய வருகிறது மேலும் இந்த சீரியலில் கதாநாயகி ஐஸ்வர்யா ராய், பாண்டியன் ஸ்டோர்ஸ் ஷீலா, கருணா விலாசினி, பிரபாகர் சந்திரன் உள்ளிட்ட பல முன்னணி பிரபலங்கள் இந்த சீரியலில் நடித்து வருகிறார்கள்.

இப்படிப்பட்ட நிலையில் இந்த சீரியல் சமீப காலங்களாக டிஆர்பி-யில் கடைசி இடத்தை பிடித்து வருகிறது இதனால் இந்த சீரியலை முடித்து விடலாம் என விஜய் டிவி முடிவெடுத்துள்ளது.பிக்பாஸ் சீசன் ஆறாவது நிகழ்ச்சி விஜய் டிவியில் வருகின்ற அக்டோபர் 9ஆம் தேதி மாலை முதல் துவங்க இருக்கிறது .

எனவே ஒவ்வொரு நாளும் ஒரு மணி நேரம் ஒளிபரப்பாக வேண்டும் என்பதற்காக டிஆர்பி-யில் எந்த சீரியல் பெரிதாக இடம்பெறவில்லையோ அந்த சீரியலை முடித்து விடலாம் என முடிவெடுத்திருக்கிறது விஜய் டிவி. அந்த வரிசையில் முதலில் முத்துக்குள் சிற்பி மற்றும் பாரதிதாசன் காலனி இந்த இரண்டு சீரியலும் முடிவடைய போகிறது.