Vijay tv: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஏராளமான ரியாலிட்டி ஷோக்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது பிரபல நிகழ்ச்சி ஒன்றை இந்த சீசனோடு முடித்துக் கொள்ளலாம் என விஜய் டிவி முடிவெடுத்த இருப்பதாக தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.
அதாவது, கடந்த சில வருடங்களாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தான் உலக அளவில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வந்தது. ஆனால் அதற்கு டஃப் கொடுக்கும் அளவிற்கு ஒளிபரப்பாகி குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை கவர்ந்த நிகழ்ச்சி தான் குக் வித் கோமாளி.
சமையல் நிகழ்ச்சியாக இருந்தாலும் காமெடி, கலாட்டா என ரசிகர்களின் ஃபேவரட் நிகழ்ச்சியாக இருந்து வருகிறது. இந்நிலையில் இந்த சீரியலின் மூலம் ஏராளமானவர்கள் மன நிம்மதியுடன் இருப்பதாகவும், தற்கொலை சென்ற முயன்ற பொழுது கூட இந்த நிகழ்ச்சியை பார்த்துவிட்டு மகிழ்ந்ததனால் தற்கொலை செய்வதை நிறுத்தி விட்டதாகவும் கூறி வருகின்றனர்.
இவ்வாறு குக் வித் கோமாளி நிகழ்ச்சி மக்கள் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்நிகழ்ச்சியின் மூலம் பல கோடி ரசிகர்களின் மனதை கவர்ந்திருப்பவர்கள் பலரும் இருக்கின்றனர். அப்படி புகழ், பாலா, சிவாங்கி, மணிமேகலை போன்றவர்களால் டிஆர்பி உச்சத்தை தொட்டது.
இவ்வாறு வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் குக் வித் கோமாளி நிகழ்ச்சின் 4வது சீசன் சமீபத்தில் நிறைவடைந்தது. ஆனால் முதல் இரண்டு சீசன்கள் அளவிற்கு மூன்றாவது, நான்காவது சீசன்கள் சொல்லும் அளவிற்கு டிஆர்பியில் இடம்பெறவில்லையாம். எனவே இதன் காரணமாக இந்த சீசனோடு குக் வித் கோமாளி நிகழ்ச்சியை முடித்துக் கொள்ளலாம் என விஜய் டிவி முடிவெடுத்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.