கோபிநாத் அவர்கள் தன் பேச்சுத் திறமையினால் திரையுலகில் பிரபலமானார். இவர் தற்போது விஜய் டிவியில் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும், தனியார் பண்பலை ஒன்றில் வானொலி நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் பணியாற்றி வருகிறார். விஜய் டிவியில் தற்பொழுது ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் நீயா நானா என்ற நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலம் அடைந்தார்.
இவருக்கு தமிழ் மொழியில் அதிக ஆர்வம் உள்ளதால் மொழி பற்றுடன் தெள்ளத் தெளிவாக உச்சரிப்பதும் , மொழி நடையுடன்னும் , கனத்த குரலில் பேசுவது போன்றவை இவருக்கு வரபிரசாதமாக அமைந்துள்ளது. இத்தகைய பேச்சு திறமை அனைவரையும் கவர்ந்திழுத்தது. தொகுப்பாளர் என்றாலே ஒருவரை டார்கெட் வைத்து அவரை கலாய்த்து அந்த நிகழ்ச்சியை கலகலப்பாக கொண்டு செல்வார்கள் ஆனால் கோபிநாத் அவர்கள் சற்று வித்யாசமாக யாரையும் புண்படுத்தாமல் ஜாலியாக அந்த நிகழ்ச்சியை நடத்தி முடிப்பார்.
இதனை தொடர்ந்து விஜய் விருதுகள், முற்றிலும் பின்னணியும் நடந்தது என்ன, உன்னால் முடியும் உட்பட இன்னும் பல நிகழ்ச்சிகளில் பணிபுரிந்து வந்தார். தற்பொழுது எழுத்தாளராகவும் பணிபுரிந்து வருகிறார். அந்தவகையில் அவர் எழுதிய புத்தகங்கள் தெருவெல்லாம் தேவதைகள், ப்ளீஸ் இந்தப் புத்தகத்தை வாங்காதீங்க, நேர் நேர் தேமா, நீயும் நானும் போன்ற புத்தகங்களை எழுதியுள்ளார்.
2006ஆம் ஆண்டு இந்தியா டுடே இவருக்கு இந்தியாவின் இளம் சாதனையாளர் என்ற விருதை வழங்கியது. இதற்காக அடுத்ததாக ஜூனியர் சேம்பியன் இன்டர்நேஷனல் அமைப்பு சிறந்த இளம் இந்திய விருது 2008ஆம் ஆண்டு இவருக்கு வழங்கியது.
தற்பொழுது கோபிநாத் அவர்களின் மகள் அஜித் நடிப்பில் வெளிவந்த விசுவாசம் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள கண்ணான கண்ணே என்ற பாடலுக்கு கிடார் வாசித்து உள்ளார்.அந்த விடியோ தற்பொழுது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த வீடியோ.
#gobinath #anchors pic.twitter.com/3shxNZOpwf
— Tamil360Newz (@tamil360newz) May 4, 2020