பொதுவாக விஜய் டிவியின் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமாகி இதன் மூலம் வெள்ளித்திரையில் பல திரைப்படங்களில் நடித்து முன்னேறியவர்கள் பலர் இருக்கின்றனர். விஜய் டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் அனைத்துவருக்கும் மக்கள் மத்தியில் விரைவில் அவர்களுக்கான ஒரு இடம் உருவாகிவிடுகிறது அந்த வகையில் பெண் தொகுப்பாளராக அறிமுகமாகி பிரபலமானவர்கள் தான் டிடி, விஜே ரம்யா, பாவனா, பிரியங்கா தற்பொழுது இவர்களை தொடர்ந்து அனிதா சம்பத் விஜய் டிவி தொகுப்பாளராக இணைகிறார்.
அதாவது செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத் சன் டிவி, நியூஸ் 7 தமிழ் போன்ற சேனல்களில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்த நிலையில் பிறகு சர்க்கார், காப்பான் உள்ளிட்ட இன்னும் சில திரைப்படங்களில் நியூஸ் ரீடர்ராகவும் நடித்துள்ளார் இந்நிலையில் இவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெறுவதற்கான வாய்ப்பு கிடைத்த நிலையில் எனவே செய்தி வாசிப்பாளர் பணியை நிறுத்தினார்.
மேலும் இந்நிகழ்ச்சிக்கு பிறகு சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வரும் இவர் சொந்தமாக யூடியூப் சேனல் ஒன்றை வைத்திருக்கும் நிலையில் அதில் தொடர்ந்து புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார். இவர் பிரபல எழுத்தாளர் சம்பத்தின் மகள் என்பதால் இவருக்கு சிறுவயதில் இருந்து தமிழின் மீது அதிக ஆர்வம் இருந்து வந்துள்ளது.
எனவே இவருடைய தமிழ் உச்சரிப்பு தள்ள தெளிவாக இருந்த காரணத்தினால் தற்போது இவருக்கு விஜய் டிவியின் தொகுப்பாளராக பணியாற்றுவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. அதாவது விஜய் டிவியில் விரைவில் துவங்க இருக்கும் தமிழ் பேச்சு எங்கள் மூச்சு என்ற நிகழ்ச்சியை அனிதா சம்பத் தான் தொகுத்து வழங்க இருக்கிறார்.
மேலும் இவரை தொடர்ந்து தமிழ் புலமை வாய்ந்தவர்கள் நடுவர்களாக பங்கேற்க இருக்கும் நிலையில் தற்போதைய நிகழ்ச்சி எப்பொழுது தொடங்கும் என்ற ப்ரோமோவை அனிதா சம்பத்தை வைத்து விஜய் டிவி ப்ரோமோவை தயாரித்துள்ளது. இவ்வாறு இந்நிகழ்ச்சியின் மூலம் மற்ற தொகுப்பாளருக்கு டஃப் கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.