சின்னத்திரையில் டிஆர்பியில் முன்னணி வகிக்க வேண்டும் என்பதற்காக அனைத்து தொலைக்காட்சிகளும் போராடி வருகின்றது. அந்த வகையில் வாரம் தோறும் சீரியல்களின் டிஆர்பி ரேட்டிங் வெளியாகி வரும் நிலையில் முதல் இடத்தினை பிடித்து வரும் முக்கியமான சீரியல் தான் சன் டிவியின் எதிர்நீச்சல் இந்த சீரியலுக்குத்தான் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது.
இந்த சீரியலில் ஏராளமான முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வரும் நிலையில் சுவாரசியமாக ஒளிபரப்பாகி வருவதால் மக்கள் மட்டுமல்லாமல் பிரபலங்களும் எதிர்நீச்சல் சீரியல் தனக்கு பிடித்திருப்பதாக கூறி வருகின்றனர். அப்படி விஜயின் அம்மா சோபா சந்திரசேகர், மிகப்பெரிய அரசியல்வாதி பிரமுகரான சுப வீரபாண்டியன் போன்றவர்களும் இந்த சீரியல் பிடித்திருப்பதாக மீடியாவில் சொல்லியிருக்கின்றனர்.
இவ்வாறு இந்த சீரியல் மக்கள் இந்த அளவிற்கு விரும்பி பார்ப்பதற்கு முக்கிய காரணமாக ஆதி குணசேகரனின் கேரக்டர் அமைந்துள்ளது. இவருடைய வில்லத்தனம் ரசிகர்களை கவர்ந்திருக்கும் நிலையில் ஆதி குணசேகரன் கேரக்டரில் நடித்து வருபவர் தான் மாரிமுத்து. இவர் சினிமாவில் பல வருடங்களாக உதவி இயக்குனராக இருந்து வருகிறார் அதேபோல் திரைப்படங்களிலும் நடித்திருக்கும் நிலையில் இவருக்கு அடையாளம் கொடுத்ததாக எதிர்நீச்சல் சீரியல் அமைந்திருக்கிறது.
இப்படிப்பட்ட நிலையில் எப்படியாவது ஆதி குணசேகரனை தங்களுடைய சீரியல் நடிக்க வைக்க வேண்டும் என விஜய் டிவி போராடி வருகிறது. அப்படி புதிதாக விஜய் டிவியில் தொடங்கப்பட்ட கிழக்கு வாசல் சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துவரும் நிலையில் இதனை தளபதி விஜயின் அப்பாவும் இயக்குனருமான எஸ்ஏ சந்திரசேகர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இந்த கேரக்டருக்கு முதலில் மாரிமுத்துவிடம் பேசி இருக்கிறார்கள் ஆனால் மாரிமுத்து இந்த சீரியல் பண்ண முடியாது என கூறிவிட்டதனால் அதன் பிறகு தான் சந்திரசேகரிடம் இந்த கேரக்டர் போயிருக்கிறது. பொதுவாக ஒரு தொலைக்காட்சியில் நடித்து வரும் பிரபலம் மற்ற தொலைக்காட்சிக்கு போகக்கூடாது என்பது வழக்கமாக இருந்து வரும் நிலையில் இதன் காரணத்தினால் தான் மாரிமுத்து வேண்டாம் என கூறியிருப்பார் என சொல்லப்படுகிறது. இவ்வாறு மாரிமுத்துவை தங்களது சீரியலுக்கு அழைத்து விட்டால் சன் டிவியின் டிஆர்பி அடி வாங்கும் என்பதில் விஜய் டிவி உறுதியாக இருந்திருப்பது இதன் மூலம் தெரிய வருகிறது.