இந்த வருடம் சினிமா பிரபலங்கள் பலரையும் ரசிகர்கள் இழந்துவிட்டார்கள் அந்தவகையில் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த நடிகர் வடிவேல் பாலாஜி இவர் விஜய் டிவி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வடிவேலு போல செய்து காட்டி ரசிகர்களிடையே மிகவும் பிரபலம் அடைந்தார்.
இவர் செப்டம்பர் மாதம் மாரடைப்பால் உயிர் இழந்தார் அவர் மறைந்த இந்த தகவல் அப்பொழுது சினிமா பிரபலங்கள் பலருக்கும் அதிர்ச்சியான தகவல் ஆக மாறியது மட்டுமல்லாமல் பலரும் இவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்கள்.
இவர் மறைந்தாலும் தற்போதும் இவர் நடித்த நிகழ்ச்சிகள் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது அப்போதெல்லாம் அந்த நிகழ்ச்சியை பார்க்கும் பொழுது ரசிகர்கள் பலரும் நீங்கள் இல்லாமல் இப்ப போயிட்டீங்க என்று கூறி வருகிறார்கள்.
மேலும் வடிவேல் பாலாஜி குடும்பத்தை ஒரு பிரபலம் சந்தித்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துள்ளார்.
அந்த பிரபலம் யார் என்று தெரியுமா அந்த பிரபலம் தான் புகழ் இவர் வடிவேல் பாலாஜியின் குடும்பத்தை சந்தித்த போது அவர்களுடன் எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார்.
இந்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.