தொலைக்கட்சிகளுக்கு இடையே டி ஆர் பி யில் மாபெரும் போட்டி நடைபெற்று வருகிறது அது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான், அதனால் ஒவ்வொரு தொலைக்காட்சியும் தங்களுடைய டிஆர்பியை ஏற்றுக் கொள்வதற்காக புதிதுபுதிதாக நிகழ்ச்சி, சீரியல், ரியாலிட்டி ஷோ என ரசிகர்களை கவர்வதற்காக ஒளிபரப்பி வருகிறார்கள்.
என்னதான் பல தொலைக்காட்சிகளில் நடித்து பிரபலம் அடைந்தாலும் விஜய் தொலைக்காட்சியில் இருப்பவர்கள் மிக விரைவாக பிரபலம் அடைந்து விடுகிறார்கள். மேலும் விஜய் தொலைக்காட்சியில் பணியாற்றும் தொகுப்பாளர்கள் மற்றும் பிரபலங்களின் நிலைமைதான் கவலைக்குரிய விஷயமாக இருக்கிறது.
அந்த வகையில் முதலில் தொகுப்பாளினி திவ்யதர்ஷினி அவர்களைப் பற்றி பார்ப்போம். விஜய் தொலைக்காட்சியின் அசுர வளர்ச்சிக்கு மிகப்பெரிய பங்கு என்றால் தொகுப்பாளினி டிடி தான். இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிக்கு பல ரசிகர்கள் இருக்கிறார்கள். இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி டிஆர்பி யில் நல்ல ரேட்டிங் கிடைக்கும்.
இப்படி மிகவும் டாப் ரேட்டிங்கில் இருந்த டிடி முதன்முதலில் விஜய் தொலைக்காட்சியில் அடிபட்டவர் இவர்தான். இவர் முதன்முதலில் திருமணம் செய்து கொண்ட பொழுது பரபரப்பாக பேசப்பட்ட நிலையில் அடுத்த சில வருடங்களிலேயே விவாகரத்து பெற்று தனிமரமாக மாறினார்.
அடுத்ததாக ரம்யா விஜய் தொலைக்காட்சி மூலம் புகழின் உச்சத்திற்கு சென்றவர் தான் ரம்யா இவர் பல தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றி வந்தார். இவரும் விஜய் தொலைக்காட்சியில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட வந்த தொகுப்பாளர்களில் ஒருவர் இவருக்கும் திருமணம் நடைபெற்றது அதேபோல் சில வருடங்களிலேயே விவாகரத்தும் ஆகிவிட்டது.
அடுத்து நாம் பார்க்கப் போவது ரக்சன் நடிகர் ரக்சன் விஜய் தொலைக்காட்சியில் பணியாற்றி பிரபலமடைந்தவர் அதன் மூலம் இவருக்கு கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என்ற திரைப்படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானார், ரக்ஷனுக்கும் தொகுப்பாளினி ஜாக்குலின் என்பவருக்கும் காதல் கிசுகிசு ஏற்பட்டு பிரபலமாக பேசப்பட்டது. இந்தநிலையில் ரக்சன் தற்போது சித்ராவின் தற்கொலையில் முக்கிய காரணமாக இருக்கிறார் என கூறப்படுகிறது.
சித்ரா-பல வருடங்களாக தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினியாக பணியாற்றி வந்த சித்ராவிற்கு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட வந்த பாண்டியன் ஸ்டோர் சீரியல் மூலம் மிகவும் பிரபலம் அடைந்தார், இந்த சீரியல் மூலம் மிகப் பெரிய ரசிகர் வட்டத்தை உருவாக்கி வைத்திருந்தார்.மேலும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்து வந்தது, இந்த நிலையில் தற்போது அவரின் நிலைமை என்ன என்பது உங்களுக்கே தெரியும். இவரின் நிச்சயதார்த்தம் விஜய் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமாக கொண்டாடினார்கள்.
கலக்கப்போவது யாரு நவீன் நவீன் மிமிகிரி செய்வதில் வல்லவர் சமீபத்தில் இவர் சூரரைப்போற்று திரைப்படத்தில் அப்துல் கலாம் அவர்களுக்கு குரல் கொடுத்தவர் ஆனால் நவீன் இரண்டு பொண்டாட்டி பிரச்சனையில் சிக்கி சின்னாபின்னம் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரியோ சன் டிவியில் பிரபலமாகி பின்பு விஜய் தொலைக்காட்சியில் சீரியலில் நடித்து பிரபலமடைந்த வந்தவர் ரியோ. இவர் விஜய் தொலைக்காட்சியில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது கார்த்திக் வேணுகோபால் இயக்கத்தில் நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக வெள்ளித்திரையில் அறிமுகமானார். இப்படி அடுத்தடுத்து கட்டத்தை நோக்கி சென்ற ரியோ வை பிக் பாஸ் நிகழ்ச்சியில் களமிறக்கி மக்கள் மத்தியில் கெட்ட பெயரை சம்பாதித்துக் கொடுத்துவிட்டது இந்த விஜய் தொலைக்காட்சி.
அர்ச்சனா தொகுப்பாளினி அர்ச்சனாவும் சன் தொலைக்காட்சியில் தனது மீடியா வாழ்க்கையை தொடங்கிய பின்பு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக நல்ல மரியாதையுடன் வாழ்ந்து வந்தார். ஆனால் பணத்தைக் காட்டி அர்ச்சனாவை பிக்பாஸில் விழ வைத்து வச்சு செய்து வருகிறார்கள்.
இப்படி பல பிரபலங்களின் வாழ்க்கையில் விஜய் தொலைகாட்சி சடுகுடு ஆடியது பலருக்கும் தெரிந்த விஷயம்தான். என்னதான் விஜய் தொலைக்காட்சி காசைக் கொட்டி கொட்டி கொடுத்தாலும் மக்கள் மத்தியில் மரியாதை இருக்கிறதா என்பதை கேட்டால் அது கேள்விக்குறிதான்.