vijay tv fame sunitha stunning beauty in half saree: சுனிதா இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான டான்ஸ் ஷோ மூலம் பிரபலமடைந்தார். அவருடைய டான்ஸை பார்த்து அனைவரும் திகைத்துபோனார்கள்.இவர் தற்பொழுது சின்னத்திரையில் பணியாற்றுவதை நிறுத்திவிட்டு வெள்ளித்திரையில் கால் தடம் பதித்துள்ளார். இப்பொழுது தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் தனுஷ் நடிப்பில் வெளிவந்த மிகவும் பிரபலமடைந்த படமான 3 ல் ஸ்ருதிஹாசனின் தோழியாக நடித்திருப்பார்.
அதுமட்டுமல்லாமல் சீரியலிலும் நடித்து வருகிறார். அதற்கடுத்ததாக விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோ ஒன்றில் போட்டியாளராக கலந்து கொண்டு கலக்கி வருகிறார். பாய்ஸ் வெர்சஸ் கேர்ள்ஸ் நிகழ்ச்சியின் மூலம் இவர் அறிமுகமானார். இவர் வட மாநிலத்தை சேர்ந்தவர் ஆவார். இவருக்கு நடனத்தின் மீது அதிக ஆர்வம் உள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பான ஜோடி நிகழ்ச்சியில் மூன்றுமுறை போட்டியாளராக பங்கேற்று உள்ளார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றாகும்.
தற்பொழுது ஊரடங்கு உத்தரவின் காரணமாக வீட்டிலேயே முடங்கி கிடக்கும் ரசிகர்களுக்கு போரடிக்காமல் இருக்க இன்ஸ்டாகிராமில் அவருடைய அழகிய புகைப்படங்களை வெளியிட்டு கலக்கி வருகிறார். அந்த புகைப்படம் தற்பொழுது வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.