இணையத்தளத்தில் வைரலாகும் ரியோ மகளின் புகைப்படம்!! குழந்தை மாதிரியே பேரும் சூப்பர்!!!

rio-raj
rio-raj

actor rioraj baby photo: சமீபகாலமாக சின்னத்திரையில் நடித்து வரும் பிரபலங்கள் வெள்ளித்திரையில் நடிகர், நடிகைகளாக மாறி மிகப் பெரிய அளவில் வளர்ந்து உள்ளனர். அப்படி பலருக்கு வாய்ப்பு உருவாக்கி கொடுத்துள்ளது பிரபல விஜய் தொலைக்காட்சி. அப்படிப் பார்க்கையில் ரோபோ ஷங்கர், சிவகார்த்திகேயன் அவர்களை தொடர்ந்து தற்போது இந்த லிஸ்டில் வந்து உள்ளவர்தான் ரியோ ராஜ்.

இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் என்ற சீரியலில் நடித்ததன் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலம் அடைந்தார். இதனை தொடர்ந்து அவர் சன் மியூசிக்கில் தொகுப்பாளராக பணியாற்றி வந்த நிலையில் விஜய் தொலைக்காட்சியில் சரவணன் மினாட்சி மூன்றாவது சீஸனில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

அதை திறம்பட நடித்து மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் மேலும் பிரபலமடைந்தார். இப்படி பிரபலமடைந்த இவரை சிவகார்த்திகேயன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா என்ற திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்தார். அதை ஏற்று நடித்த ரியோ ராஜ் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

இத்திரைப்படம் திரையரங்கில் வெளிவந்து ஓரளவு வெற்றியைப் பெற்றுதந்தது. தற்போது இவர் பிளான் பண்ணி பண்ணனும் என்ற புதிய திரைப்படத்தில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

இந்த நிலையில் இவர் தனது குழந்தையுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிட்டுள்ளார். குழந்தை பிறந்து ஆறு மாதத்திற்க்கு பிறகு தற்பொழுது தான் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அக்குழந்தைக்கு ரித்தி என பெயர் சூட்டியுள்ளனர். இதோ அந்த  புகைப்படம்.