விஜய் டிவியில் அறிமுகமாகிய ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வரும் தான் ஈரமான ரோஜாவே 2. இந்த சீரியலில் நடித்து வரும் அனைத்து கேரக்டர்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகறது. இந்நிலையில் தற்பொழுது விருப்பமில்லாமல் நடந்த திருமணத்தை எப்படி ஏற்றுக் கொள்ளப் போகிறார்கள் என்பதை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வருகிறது.
பிரியா ஜீவாவை ஏற்றுக்கொண்ட நிலையில் பார்த்திபனும் காவியாவை ஏற்றுக்கொண்டார். ஆனால் ஜீவா மற்றும் காவியா ஆகிய இருவருமே தயங்கி வருகிறார்கள். தற்பொழுது ஜீவா பிரியாவுடன் ஹோம்மியில் இருக்கும் குழந்தைகளை அழைத்துக்கொண்டு சுற்றுலா செல்கிறார்கள்.
இவர்களை தொடர்ந்து காவியா பெங்களூர்க்கு எக்ஸாமுக்கு செல்கிறார். காவியா பார்த்திபனை வரவேண்டாம் என்று கூறி விட்டு தனியாக சென்றார் ஆனால் பார்த்திபன் காவியாவிற்கு தெரியாமல் காவியா போகும் பஸ்ஸில் போய்க் கொண்டிருக்கிறார்.
இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது பிரியா மற்றும் ஜீவா டூர் சென்றுள்ள நிலையில் அங்கு ஒரு பையன் கடலில் மாற்றிக் கொள்கிறான். இந்தப் பையனுடைய அம்மா என் பையனை காப்பாற்றுங்க என்று கத்துகிறார். உடனே ஜீவா அந்தப் பையனை காப்பாற்றுவதற்காக கடலில் இறங்குகிறார்.
கடலில் ரொம்ப தூரம் ஜீவா போனதால் பிரியா மிகவும் பயந்து போகாதீங்க என்று அழைக்கிறார். பிறகு ஜீவா அந்தப் பையனை தூக்கிக்கிட்டு வந்து விடுகிறார். அந்தப் பையனும் எந்த ஒரு பாதிப்பும் இல்லாமல் உயிர் பிழைத்து விடுகிறார். இப்படிப்பட்ட நிலையில் உணர்ச்சிவசப்பட்ட பிரியா அனைவர் முன்பும் ஜிவாவை கட்டி பிடித்து முத்தம் கொடுக்கிறார்.
ஜீவாவுக்கு என்ன சொல்வதென்று தெரியாமல் அப்படியே திகைத்து நிற்கிறார். இவர்களைத் தொடர்ந்து பார்த்திபன் தனது அம்மாவிற்கு போன் போட்டு நான் காவியாவிற்கு தெரியாமல் பெங்களூர் செல்கிறேன் என்று கூறுகிறார்.இதுதான் இன்றைய எபிசோடில் ஒளிபரப்பாக இருக்கிறது.