முதல் சீசன் மிகப்பெரிய வெற்றியை பெற்றதால் இரண்டாவது சீசனையும் அறிமுகப்படுத்தி தற்போது ரசிகர்கள் மனதை கவர்ந்துள்ள சீரியல் தான் ஈரமான ரோஜாவே 2. இந்த சீரியலில் நடித்து வரும் அனைத்து கேரக்டர்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் தற்பொழுது இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஹீரோவான ஜீவா மற்றும் பிரியா இவர்களின் ஜோடி ரசிகர்கள் மனதை கவர்ந்திருப்பதாக தெரியவந்துள்ளது.
ஜோடி மாற்றி திருமணம் நடைபெற்ற நிலையில் தற்போது பிரியா ஜீவாவை ஏற்றுக் கொண்ட நிலையில் ஜீவாவும் பிரியாவுக்காக தன்னை மாற்றிக் கொண்டு வருகிறார். மேலும் இவர்கள் இடையே ரொமான்ஸ் நடப்பதும் வழக்கமாக இருந்து வருகிறது. மேலும் ஜீவாவை அதிகளவில் காதலித்து வருகிறார் என்பது அனைவருக்கும் வெளிப்படையாக தெரிகிறது.
எனவே பிரியாவின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய வேண்டும் என்பதற்காக மல்லிகை பூ,அல்வா என பல சர்ப்ரைஸ்களை கொடுத்து வருகிறார். இதனைத் தொடர்ந்து ஒரு பக்கம் காவியா பார்த்திபனை ஏற்றுக் கொள்ளாமல் இருந்து வரும் நிலையில் பார்த்திபன் காவியாவை காதலிக்க ஆரம்பித்துள்ளார்.
இதன் காரணமாக காவியாவிற் புரிய வைக்க வேண்டும் என்பதற்காக பார்த்திபன் பல முயற்சிகளை செய்து வருகிறார். இருந்தாலும் காவியா நான் இன்னும் கொஞ்ச நாளில் வீட்டை விட்டு போய் விடுவேன் என கூறி வருகிறார். இப்படிப்பட்ட நிலையில் இன்றைய எபிசோடில் பாத்ரூமில் தண்ணி வராத காரணத்தினால் காவியாவின் புடவைகள் அனைத்தையும் பார்த்திபன் துவைத்து தருகிறார். இதனை பார்த்த அவருடைய அம்மா இப்படியே போய்க் கொண்டிருந்தால் என்ன ஆவது என நினைத்து வருத்தப்படுகிறார்.
பிரியா இரண்டு கைகளிலும் மருதாணி வைத்திருக்கும் நிலையில் அவரின் புடவையில் எறும்பு புகுந்து விட்டது ஜிவாவிடம் சொல்ல முடியாமல் நெளிந்து கொண்டிருக்கிறார். க்யூட்டாக இருவரும் இருந்துவரும் நிலையில் இதனை பார்த்த ரசிகர்கள் க்யூட்டான ஜோடிகளாக இருக்கிறார்கள், இவர்களை பொழுது எனக்கு வெட்கம் வருதே! பல கமெண்ட்களை தெரிவித்து வருகிறார்.