மீண்டும் ஜீவாவுடன் வாழ ஒப்புக்கொண்ட பிரியா.! ஆனால் இப்படி ஒரு ட்விஸ்ட் இருக்கே..

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஏராளமான சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு எடுத்து வருகிறது அந்த வகையில் தற்பொழுது மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்றுதான் ஈரமான ரோஜாவே 2. ஜீவா காவியா காதலித்தது பார்த்திபன் பிரியாவிற்கு தெரியாமல் இருந்து வந்த நிலையில் பிறகு அனைத்து உண்மையும் தெரிய வருகிறது.

எனவே இதனை ஏற்றுக் கொள்ள முடியாமல் பிரியா ஜீவா தனக்கு துரோகம் செய்து விட்டதாகவும் ஏமாற்றி விட்டதாகவும் கூறிவிட்டு வீட்டை விட்டு வெளியேறியுள்ளார் தனது அம்மா வீட்டில் தங்கி வரும் நிலையில் பிரியாவின் மனதை மாற்ற வேண்டும் என்பதற்காக அவரும் பிரியாவின் வீட்டில் தங்கி வருகிறார்.

ஜீவாவின் அப்பா பிரியாவை அழைத்துக் கொண்டுதான் வீட்டிற்கு வரவேண்டும் என கூறிய நிலையில் எனவே தனது அப்பாவின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக பிரியாவின் மனதை மாற்ற முயற்சிக்கிறார் ஆனால் பிரியா தொடர்ந்து ஜீவாவின் மீது பழியை சுமத்தி வருகிறார்.

அந்த வகையில் ஒரு முறை ஜீவா தனது மாமனாருடன் இணைந்து குடித்துக் கொண்டிருக்க திடீரென பிரியா மற்றும் அவருடைய அம்மா வீட்டிற்கு வருவதாக சொல்கின்றனர் எனவே இவர்கள் வருவதற்குள் சரக்கை ஜீவா தனது ரூமில் ஒலிய வைக்கிறார் அதனை தெரியாத தனமாக எடுத்து குடித்து விடுகிறார் பிரியா.

இவ்வாறு நடந்த நிலையில் ஜீவா வேண்டும் என்றே  தன்னை சரக்கு அடிக்க வைத்து தன்னிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சித்ததாக சந்தேகப்பட்டு வீட்டை விட்டு வெளியில் அனுப்பி விடுகிறார் இவ்வாறு இது ஒரு புறம் போய்க்கொண்டிருக்க மறுபுறம் ஜீவா தொடர்ந்து காவியாவின் மேல் பாசம் இருப்பது போலவே நடித்து வருகிறார்.

இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது இவர்களுக்கு தாலி கோர்க்கும் பங்க்ஷன் நடைபெறுகிறது பார்த்திபன் காவியா தாலி கோர்க்கும் பங்க்ஷன் முடிந்தவுடன் பிரியா பையை தூக்கிக்கொண்டு தனது வீட்டிற்கு கிளம்புகிறார். உடனே ஜீவாவின் அப்பா இவ்வாறு நீ வீட்டை விட்டு கிளம்புவது எங்களுக்கு பிடிக்கவில்லை என கூற ஜீவா அதற்கு அனைத்து குற்றவாளிகளுக்கும் ஒரு வாய்ப்பு கொடுப்பார்கள் எனவே தனக்கும் அது போன்று ஒரு வாய்ப்பை தர வேண்டும் என கேட்க அதற்கு பிரியா தருவதாக கூறுகிறார். மேலும் ஜீவா இதற்கு மேல் சின்ன தப்பு செய்தாலும் வீட்டை விட்டு கிளம்பி விடுவதோடு மட்டுமல்லாமல் விவாகரத்தும் செய்து விடுவதாக கூற இதோட அந்த ப்ரோமோ நிறைவடைகிறது.