உங்களுக்கும் காவியாக்கும் இடையில என்ன ரகசியம் இருக்கு.! இப்ப கூட எனக்கு உண்மையா இல்ல மீண்டும் பிரியப்போகும் ஜீவா மற்றும் பிரியா…

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியலான ஈரமான ரோஜாவே 3 சீரியலில் ஜீவா காவியா இருவரும் காதலித்த உண்மை அனைவருக்கும் தெரிய வந்ததால் தற்பொழுது பார்த்திபன் காவியாவை ஏற்றுக் கொள்ள முடியாமல் இருந்து வருவது போல பிரியாவும் ஜீவாவை ஏற்றுக் கொள்ள முடியாமல் தன்னை ஏமாற்றி விட்டதாக கூறி வருகிறார்.

எனவே இதனால் ஏராளமான பிரச்சனைகள் அரங்கேறி வந்த நிலையில் எரிகிற தீயில் எண்ணெயை ஊற்றுவது போல் தேவி செய்திருப்பது மேலும் பிரச்சனையை உண்டாக்கியிருக்கிறது. அதாவது ஜீவா தன்னை ஏமாற்றிவிட்டதாக பிரியா தன்னுடைய வீட்டில் இருந்து வந்தார் எனவே ஜீவா பல முயற்சிகளை செய்தும் பிரியா வராத காரணத்தினால் பிறகு காவியாவிற்கு தாலி கோர்க்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட பிரியாவை வீட்டிற்கு போகக்கூடாது என வீட்டில் இருப்பவர்கள் கூற ஜீவாவும் எல்லோருக்கும் சான்ஸ் கொடுப்பாங்க அதே போல் தனக்கும் கொடுக்குமாறு கேட்கிறார். அதற்கு பிரியாவும் வீட்டில் இருக்க ஒப்புக்கொள்ள பிறகு ஜிவா சின்ன தப்பு செய்தாலும் வீட்டை விட்டு கிளம்பி விடுவதாக கூறுகிறார்.

இப்படிப்பட்ட நிலையில் காவியா தொடர்ந்து வாந்தி, மயக்கம் இருந்து வந்ததால் மருத்துவமனைக்கு செல்ல அங்கு டாக்டர் கர்ப்பமாக இருப்பதாகவும் ட்வின்ஸ் பேபி எனவும் சொல்ல மிகவும் மகிழ்ச்சி அடைகிறார். ஆனால் பார்த்திபன் இதனை ஏற்றுக் கொள்ளும் மனநிலையில் இல்லாத காரணத்தினால் அவர் மாறியவுடன் சொல்லலாம் என காவியா நினைத்த நிலையில் பிறகு யாரிடமும் தான் கர்ப்பமாக இருப்பதை கூறவில்லை.

இப்படிப்பட்ட நிலையில் ஜீவா தனது நண்பருடன் மருத்துவமனைக்கு செல்லும் பொழுது காவியா கர்ப்பமாக இருப்பது குறித்து நர்ஸ் சொல்லி விடுகிறார் எனவும் காவியாவிடம் இதனை பற்றி கேட்க அதற்கு ஆமாம் நான் கர்ப்பமாகத்தான் இருக்கிறேன் ஆனால் இதனை யாரிடமும் சொல்ல வேண்டாம் நானும் பார்த்திபனம் மகிழ்ச்சியாக வாழவில்லை எனக் கூறி அழுகிறார்.

எனவே இந்த காரணத்தினால் ஜீவாவும் யாரிடமும் கூறவில்லை. இந்நிலையில் தேவி காவியா கர்ப்பமாக இருப்பது குறித்து தெரிந்துக் கொண்ட நிலையில் இது ஜீவாவுக்கும் தெரியும் என போட்டு உடைக்கிறார். பார்த்திபன் காவியாவிடமிருந்து சண்டை போட ஜீவாவிடம் பிரியா சண்டை போடுகிறார்.

அப்படி தற்பொழுது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் காவியா கன்சீவ்வா இருக்கிற விஷயத்தை ஏன் என்கிட்ட சொல்லாம மறைச்சீங்க ஜீவா காவியா கன்சீவ்வா இருக்கிறது எனக்கு தெரியும் அதை நீங்க ரெண்டு பேரும் சொல்லாமல் மறைத்ததும் எனக்கு தெரியும் இன்னைக்கு நானும் பார்த்திபனம் நிம்மதி இல்லாம இருக்கோம் உங்களுக்கும் காவியாக்கும் நடுவுல என்னவென்று ரகசியம் இருக்கு சொல்லுங்க என்ன சட்டையை பிடித்து சண்டை போடுகிறார்.

அப்பொழுது ஜீவா காவியா தான் அவ கன்சீவ்வா இருக்கிற விஷயத்த யாருகிட்டயும் சொல்ல வேணாம்னு சொன்னா என சொல்ல அதற்கு பிரியா இப்ப கூட நீங்க எனக் உண்மையா இல்ல காவியாவுக்கு தான் உண்மையா இருக்கீங்க எனக் கூற ஜீவா அதிர்ச்சி அடைகிறார்.