விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஈரமான ரோஜாவே 2 சீரியல் தொடர்ந்து பல திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வரும் நிலையில் தற்போது பார்த்திபனின் அத்தையினால் மேலும் மிகப்பெரிய பிரச்சனை ஏற்பட்டு இருக்கிறது. எனவே இதனால் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்று எதிர்பார்ப்புடன் கதைகளும் நகர்ந்து கொண்டிருக்கிறது.
அதாவது காவியா தொடர்ந்து வாமிட், மயக்கம் எடுத்து வந்ததால் ஹாஸ்பிடலுக்கு செல்கிறார் அங்கு சென்றவுடன் காவியா கர்ப்பமாக இருப்பது தெரிய வருகிறது எனவே இதனை பார்த்தியிடம் சொல்ல நினைத்தாலும் பார்த்தி காவியா எப்படியாவது கலெக்டராகி விட வேண்டும் எனவே தனித்தனியாக பிரிந்து வாழ முடியும் என பார்த்திபன் நினைத்து வருவதனால் காவியா இதனை சொல்ல தயங்குகிறார்.
எனவே தான் கர்ப்பமாக இருப்பதை சொல்ல முடியாத பாவி ஆயிட்டனே பார்த்தி என வருத்தப்பட்டு வரும் நிலையில் யாருக்கும் தெரியாமல் இருந்து வருகிறது. இப்படிப்பட்ட நிலையில் ஜீவா திடீரென மருத்துவமனைக்கு செல்ல அங்கு மருத்துவர் காவியா இருப்பதாகவும் உங்க அண்ணன் இரண்டு குழந்தைகளுக்கு அப்பாவாக போவதாக கூறுகிறார்.
எனவே மகிழ்ச்சியான ஜீவா இதனை அனைவரிடமும் சொல்வதற்காக வீட்டிற்கு வர ஆனால் யாரும் இல்லை எனவே காவியாவிடம் நீ கர்ப்பமாக இருக்கியா என கேட்க ஆமாம் என சொல்கிறார். இதனை அனைவரிடமும் சொல்லணும் என சொல்ல அதற்கு காவியா வேண்டாம் என கூறிவிடுகிறார். நானும் பார்த்திபனும் சந்தோஷமா இல்ல ஜீவா என கூறி ஜீவா அதிர்ச்சி அடைகிறார்.
எனவே ஜீவாவும் இதனை அனைவரிடமும் மறைத்து விடுகிறார் இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் பார்த்திபனின் அத்தை பார்த்திபனிடம் ஒரு விஷயம் கேள்விப்பட்டேன் வாழ்த்து சொல்லிட்டு போலாம்னு வந்தேன் என கூற அதற்கு பார்த்திபன் என்ன விஷயம் என கேட்கிறார். காவியா கன்சீவ்வா இருக்கா எனக் கூற அதற்கு காவியா கன்சீவ்வா இருந்தா என்கிட்ட சொல்லாம இருக்க மாட்டா என பார்த்திபன் கூறுகிறார்.
பிறகு அவருடைய அத்தை அவ கன்சீவ்வா இருக்கிற விஷயத்தை உன்கிட்ட சொல்லல ஆனா ஜீவா கிட்ட சொல்லி இருக்கா என கூற இதனை பிரியாவும் கேட்டுக் கொண்டிருக்கிறார். பிறகு கோபமான பார்த்தி ரூமிற்கு சென்று நான் கேள்விப்பட்டது உண்மையா என அனைத்தையும் தூக்கிப்போட்டு விட்டு காவியாவிடம் கன்சீவ்வா இருக்கியான்னு கேட்டுக்க ஆமாம் பார்த்தி என கூறி அழுகிறார் ஆனால் என்கிட்ட சொல்லாம ஜீவா கிட்ட மட்டும் சொல்லி இருக்க என கூற காவியா அதிர்ச்சி அடைகிறார் இதோடு இந்த ப்ரோமோ நிறைவடைகிறது.