விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஈரமான ரோஜாவே 2 சீரியலில் தற்பொழுது காவியா கர்ப்பமாக இருந்து வரும் நிலையில் இதனை பார்த்திபனிடம் சொல்லாமல் மறைக்கிறார். மேலும் அந்த குடும்பத்தில் இருப்பவர்கள் யாருக்கும் காவியா கர்ப்பமாக இருப்பது தெரியாது. இரண்டு மூன்று நாட்களாக தொடர்ந்து வாமிட், மயக்கம் இருந்து வந்ததால் சந்தேகப்பட்டு காவியா மருத்துவமனைக்கு சென்ற நிலையில் இவர் கர்ப்பமாக இருப்பது தெரிய வருகிறது.
எனவே வீட்டிற்கு வந்தவுடன் பார்த்திபனிடம் பேசிக் கொண்டிருக்கும் பொழுது விரைவில் நீ கலெக்டராக வேண்டும் என கூறுகிறார் அப்ப நான் தான் நம்ப தனித்தனியாக வாழலாம் இவ்வளவுக்கு நடிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என கூற காவியா தான் கர்ப்பமாக இருப்பதை கூட உங்களிடம் சொல்ல முடியாத ஒரு பாவி ஆய் விட்டேனே பார்த்தி என வருத்தப்படுகிறார்.
இவ்வாறு காவியா பிரகனண்ட்டாக இருப்பது யாருக்கும் தெரியாமல் இருந்து வரும் நிலையில் ஜீவாவுக்கு மருத்துவரின் மூலம் தெரிய வருகிறது. அப்படி தற்பொழுது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் ஜீவா தனது நண்பருடன் மருத்துவமனைக்கு செல்ல காவியா கன்சிவாக இருக்காங்க உங்க பிரதர் அப்பாவாக போறாரு எனக் கூற மிகவும் மகிழ்ச்சியுடன் ஜீவா வீட்டிற்கு வருகிறார்.
இந்த நேரத்தில் காவியா சாமி கும்பிட்டு விட்டு தன்னுடைய நெற்றியிலும் தலியிலும் குங்குமத்தை வைத்துக் கொண்டிருக்கிறார். பிறகு ஜீவா காவியாவிற்கு கங்ராஸ் காவியா எனக் கூறிவிட்டு அம்மா, பார்த்தி என கூப்பிடுகிறார். யாரும் இங்கே இல்லை அனைவரும் கோயிலுக்கு போய் இருக்காங்க எனக்கு கூற அதற்கு ஜீவா இப்பொழுது தான் நான் ஹாஸ்பிடல்ல இருந்து வரேன் இந்த குடும்பத்துக்கு நீ ஒன்னு இல்ல ரெண்டு வாரிச தர போற எங்க அப்பா அம்மா தாத்தா பாட்டி ஆகப் போறாங்க என மிகவும் மகிழ்ச்சி அடைகிறார்
இந்த விஷயத்தை பார்த்தி கிட்ட சொல்லிட்டியா என காவியாவிடம் கேட்க அப்பொழுது இந்த விஷயத்தை இப்போதைக்கு யாருகிட்டயும் சொல்றதா இல்ல பார்த்தி என் கூட சந்தோஷமா வாழல ஜீவா எனக் கூற ஜீவா அதிர்ச்சி அடைகிறார் இதோடு இந்த ப்ரோமோ நிறைவடைகிறது.