பல போராட்டத்திற்கு பிறகு காவியாவை காப்பாற்றிய பார்த்திபன்.! காவியாவுக்கு என்ன ஆனது.?

eramana-rojave-kaviya
eramana-rojave-kaviya

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியல்களில் ஒன்றுதான் ஈரமான ரோஜாவே 2.இந்த சீரியலில் நடித்தவரும் அனைத்து கேரக்டர்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. மேலும் ஜீவா மற்றும் ப்ரியா இவர்களின் ஜோடி ரசிகர்கள் மத்தியில் பெரிதும் கவர்ந்துள்ளார்கள். மேலும் இந்த ஜோடிகளுக்கு என்று தனி ஒரு ரசிகர் பட்டாலும் இருந்து வருகிறது.

இப்படிப்பட்ட நிலையில் இளம் ரசிகர்களை கவரும் வகையில் பல காட்சிகள் இடம் பெற்று வருகிறது. அந்த வகையில் தற்பொழுது கோவிலில் எதேர்ச்சியாக சந்தித்துக் கொண்ட காவியா மற்றும் பார்த்திபன் இருவரும் பேசிக் கொள்கிறார்கள். அப்பொழுது காவியாவை இன்ஸ்டியூட்டில் விட்டு விடுகிறேன் எனக் கூறி அழைத்து செல்கிறார் பார்த்திபன்.

பார்த்திபன் ஏதும் பேசினாலும் அதற்கு எதிராக பேச வரும் காவியா உங்களிடம் ஒன்று சொல்ல வேண்டும் நான் வீட்டிற்கு வந்ததும் சொல்கிறேன் என கூறுகிறார் எனவே பார்த்திபன் காவ்யாவை விட்டுவிட்டு என்ன சொல்லப் போகிறாள் என்பதை பற்றி மனதிற்குள்ளேயே பேசி வருகிறார். இப்படிப்பட்ட நிலையில் காவியாவின் இன்ஸ்டிடியூட்டில் தீ விபத்து ஏற்படுகிறது.

அனைவரும் தப்பித்து ஓட காவியா உடனே பார்த்திபனுக்கு போன் செய்கிறார் ரூமிலேயே மாட்டிக் கொண்டதால் காவியா புகை மூட்டத்தின் காரணமாக மூச்சு திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்து விடுகிறார் அதோட மட்டுமல்லாமல் தனது தோழியிடம் காது கேட்காது போல் சைகையும் காட்டுகிறார்.

இதனைக் கேட்டதும் பதறி அடித்து பார்த்திபன் ஓடி வர பார்த்திபனை உள்ளே விடாமல் போலீஸார்கள் தடுக்கிறார்கள். இருந்தாலும் அனைத்தையும் மீறி விட்டு பார்த்திபன் ஓடி காவியாவை காப்பாற்றுகிறார் இதனை கேட்ட குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவரும் சம்பவ இடத்திற்கு வந்து விடுகிறார்கள்.

பிறகு காவியாவை மருத்துவமனையில் அனுமதிக்க மருத்துவர்கள் சிகிச்சைக்கு பிறகு இப்ப அவர் நார்மலாக இருக்கிறார். என கூறுகிறார்கள் அதன் பிறகு தான் பார்த்திபன், ஜீவா என அனைவரும் நிம்மதியாக இருக்கிறார்கள். இதோடு இன்றைய எபிசோட் நிறைவடைகிறது.