பார்த்திபன் காவியாவை வெறுக்க வைப்பதற்காக அவரின் அம்மா போடும் திட்டம்.! ஈரமான ரோஜாவே 2 இன்று எபிசோட்..

eramana-rojave-2-serial
eramana-rojave-2-serial

சமீபத்தில் அறிமுகமாகி இளசுகளின் மனதில் இடம்பெடுத்துள்ள சீரியல் தான் ஈரமான ரோஜாவே 2. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து செயல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துவரும் நிலையில் இந்த சீரியலுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது மேலும் இந்த சீரியல் தற்போது டிஆர்பி-யில் முன்னணி வகிக்கவும் தொடங்கியுள்ளது.

தற்பொழுது இந்த சீரியலில் ப்ரியா ஜீவாவை காதலிக்க ஆரம்பித்துள்ள நிலையில் ப்ரியா வெளிப்படகாக ரொமான்ஸ் ஆரம்பித்துள்ளார் இதன் காரணமாக ஜீவா காவியாவின் ஆசைகளை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக சமீபத்தில் மல்லிகை பூ, அல்வா போன்றவற்றை வாங்கி தந்தார் அப்பொழுது ஜீவா சாப்பிட்ட மீதியை பிரியா சாப்பிட்டார்.

ஒரு பக்கம் பார்த்திபன் காவியாவின் மனதை மாற்றுவதற்காக பல முயற்சிகளை செய்து வருகிறார் ஆனால் காவியா பார்த்திபன் எது செய்தாலும் அதனை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் வெறுத்து வருகிறார். இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது பார்த்திபன், பார்த்திபனின் அம்மா, அப்பா,ஜுவர் உள்ளிட்ட அனைவரும் உட்கார்ந்து சாப்பிட்டு கொண்டு இருக்கும் பொழுது பிரியா பரிமாறுகிறார்.

பிறகு பிரியாவை உட்கார்ந்து சாப்பிடுமாறு கூற நான் உட்கார்ந்து விட்டால் யார் பரிமாறுவது என கூறுகிறார் பிறகு காவியாவை சாப்பிட விடாமல் ஜீவா இதை சாப்பிடாதே சாப்பிடு எனக்கூறி அவர் தட்டில் எடுத்து வைக்கிறார். எனவே பார்த்திபனின் அம்மா காவியாவை என் பக்கத்தில் வந்து உட்காரு என்று கூற காவியா அத்தையின் பக்கத்தில் உட்கார்ந்து சாப்பிடுகிறார்.

இதனைத் தொடர்ந்து காவியா கலெக்டராக வேண்டும் என உன் கனவை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக நீ நல்லா படிக்க வேண்டும். எனவே பார்த்திபன் உன்னை தொந்தரவு செய்தால் சொல் அவனை நான் ரூமிற்கு விடாமல் வைத்திருக்கிறேன் எனக் கூறுகிறார். பிறகு பார்த்திபன் காவியாவை தொந்தரவு செய்யவில்லை இப்படி எல்லாம் பண்ணாதீங்கமா என்று கூறியதோடு இன்றைய எபிசோடு முடிவடைகிறது.