கடைசியில் தனது மகளின் வாழ்க்கைக்கே வேட்டுவைத்த தேவி.! ஈரமான ரோஜாவே சீரியல் இன்றைய 27/6/23 எபிசோட்

eeramana-rojave
eeramana-rojave

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி ஈரமான ரோஜாவே 2 சீரியல் தொடர்ந்து ஏராளமான திருப்பங்கள் இருந்து வரும் நிலையில் இன்றைய எபிசோடில் பிரியா ஜீவாவிடம் நீ எனக்கு உண்மையாக இல்லை காவியா பார்த்திபன் கிட்ட மறைச்சதுக்கு ஆயிரம் விஷயம் இருக்கும் ஆனால் நீ ஏன் என்கிட்ட மறைச்ச எனக்கு ஒரு சண்டை போட ஒரு கட்டத்தில் ரூமை விட்டு வெளியே சென்று விடுகிறார்.

ஜீவா ஏன் பிரியா புரிஞ்சுக்காம அவளையும் கஷ்டப்படுத்திகிட்டு நம்பளையும் கஷ்டப்படுறார் என நினைக்க இதனை அடுத்து காலையில் காவியா கர்ப்பமாக இருப்பதை தெரிந்துக் கொண்ட அவருடைய அம்மா, அப்பா, தங்கை மூன்று பேரும் வருகிறார்கள். வந்தவுடன் பார்த்திபனின் அம்மா அப்பாவிடம் மிகவும் மகிழ்ச்சியாக பேசிக் கொண்டிருக்க இவ்வாறு காவியா இவ்வளவு சீக்கிரத்தில் நல்ல செய்தி சொல்லுவானு எதிர்பார்க்கவில்லை என அவருடைய அம்மா கூறுகிறார்.

இந்த நேரத்தில் காவியா வர அவருடைய தங்கை ஸ்வீட் ஊட்டி விடுகிறார் மேலும் பார்த்திபன் வருகிறார் வந்தவுடன் காவியாவிடம் ஸ்வீட்டை கொடுத்து மாமாவுக்கு ஊட்டு என சொல்ல காவியா உன் தயக்கத்துடன் ஊட்டி விடுகிறார். பிறகு பார்த்திபனிடம் காவியாவின் அம்மா உங்கள போல ஒரு நல்ல மாப்பிள்ளை எங்களுக்கு கிடைத்ததற்கு நாங்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும் காவியாவை இவ்வளவு அன்பா அக்கரையா பார்த்து கொள்வதற்கு ரொம்ப நன்றி என குறி பேசிக் கொண்டிருக்க ஒரு கட்டத்தில் பார்த்திபன் சைட்டுக்கு போயிட்டு வருவதாக கூறிவிட்டு கிளம்புகிறவர்.

பிறகு காவியாவும் தனது அம்மாவை ரூமிற்கு அழைத்து சென்றுவிட இந்த நேரத்தில் ஜே.கே தனது அம்மாவா அப்பாவை அழைத்துக் கொண்டு வருகிறார். வந்து அமர சொல்ல பிறகு ரம்யாவை அழைக்கிறார் வாங்க என சொல்லிவிட்டு அவர்களுக்கு ஜூஸ் எடுத்து வருகிறார் ரம்யா. இந்த நேரத்தில் பார்த்திபன் அப்பாவும் ஜே கே அம்மா, அப்பாவும் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

அப்பொழுது ரம்யாவையும் ஜேகேவையும் அழைச்சிட்டு போயி அங்கேயே செட்டில் ஆக்கி விடலாம்ல என கூறுகிறார் அதற்கு நாங்க அழைச்சிட்டு போறது நல்ல விஷயம் தான் ஆனால் அதற்கு தேவி அண்ணி ஒத்துக்கணும்ல என்ன சொல்ல பிறகு பார்த்திபனின் அப்பா இவங்க திருமணத்த முதல்ல ஒத்துக்கட்டும் அதுக்கப்புறம் பார்த்துக்கொள்ளலாம் என கூற இந்த நேரத்தில் தேவி வருகிறார்.

வந்தவுடன் இவர்கள் வந்திருப்பதை பார்த்துவிட்டு மகிழ்ச்சி அடைய ஜேகேவின் அம்மா கீதாவிடம் எப்ப வந்தீங்க சொல்லவே இல்ல ரொம்ப சந்தோஷமா சொல்ல அதற்கு கீதா அண்ணி ரம்யா ஜேகே இருவரும் அவங்க காதலிக்கும் விஷயத்தை சொல்லி இருந்தா நம்மளே நல்லபடியாக செஞ்சி இருக்கலாம் இவ்வாறு அவர்கள் செய்துவிட்டார்கள் என்று எனக்கும் வருத்தம் தான் ஆனால் ஏத்துக்கிட்டு தான் ஆக வேண்டும் என சொல்ல அதற்கு தேவி என்னால இந்த கல்யாணத்தை ஏத்துக்கவே முடியாது ரம்யாவுக்கு இவன் கொஞ்சம் கூட பொருத்தமானவன் கிடையாது என சொல்ல அதற்கு ஜேகேவின் அப்பா எத வச்சு சொல்றீங்க ஸ்டேட்டஸ் வச்சு சொல்றீங்களா இல்ல கேரக்டரை வச்சு சொல்லுறீங்களா ஸ்டேட்டஸ் வச்சு பார்த்தா உங்களுக்கு குறைஞ்சவங்க நாங்க கிடையாது கேரக்டர்லையும் என்னுடைய மகன் சொக்க தங்கம் என்ன சொல்ல பிறகு தேவி நான் எதை வச்சு சொல்றேன்னு உங்களுக்கு புரியும் என குதர்க்கமாக பேசுகிறார்.

அதற்கு ஜேகே வின் அப்பாவும் எதற்கு இப்ப தேவையில்லாத விஷயத்தை பேசிகிட்டு இருக்கீங்க எனக் சொல்லுகிறார். என் பொண்ண இப்படிப்பட்ட ஒருத்தனுக்கு கல்யாணம் பண்ணி வைக்க முடியாது என தேவி கூற அதற்கு கீதா நீங்க சொல்ற ஒரு விஷயத்தை தவிர ஜேகேவுக்கு ஒரு குறையும் இல்லையே அவனை நல்லபடியாக வளர்த்திருக்கோம் என கூறுகிறார்.  பிறகு இதற்கு மேல் உண்மையை மறைச்சு ஒரு பிரயோஜனமும் இல்லை சொல்லுங்கள் எனக் கூற அதற்கு தேவி நீங்க சொல்ல வேண்டாம் நானே சொல்கிறேன் என கூறிவிட்டு ஜேகே ஒரு அனாதை எனக் கூற அனைவரும் அதிர்ச்சடைகிறார்கள்.

பிறகு ஜேகே தனது அம்மா அப்பாவிடம் சொல்லுங்க நான் தான் உங்க பையன்னு அழுத்தி சொல்லுங்க என அழுது கெஞ்ச அதற்கு கீதா நீ என்னோட வயிற்றில் பிறக்கவில்லை ஜேகே என கூற அதற்கு அவருடைய அப்பா நீ வேற ஒருத்தவங்க வயித்துல பிறந்திருக்கலாம் ஆனா உன்னை எங்களுடைய மகனாக தான் வளர்க்கிறோம் எனக் கூற இதோடு ஈரமான ரோஜாவே 2 சீரியல் இன்றைய எபிசோடு நிறைவடைகிறது.