விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் ஈரமான ரோஜாவே 2 சீரியலில் பார்த்திபன் காவியா கர்ப்பமாக இருப்பதை தன்னிடம் மறைத்ததனால் தொடர்ந்து சண்டை போட்டு வருகிறார். எனவே காவியாகவும் என்னை நம்புங்கள் அப்படி இல்லையென்றால் இந்த தாலியை நீங்க கழட்டிவிட்டு என்னை இந்த வீட்டை விட்டு வெளியில் அனுப்பி விடுங்கள் என கூற இந்த நேரத்தில் காவியா கர்ப்பமாக இருப்பதை தெரிந்துக் கொண்டு பார்த்திபனின் அம்மா அப்பா வந்து மிகவும் சந்தோஷம் என கூறுகிறார்கள்.
மேலும் ஒரு குழந்தை பெற்றுத் தந்தாலே போதும் என நினைத்த நிலையில் இரட்டை குழந்தை என்பது மிகவும் மகிழ்ச்சி தருவதாக கூறுகிறார்கள் மேலும் பார்த்திபனின் அப்பா இது எவ்வளவு சந்தோஷமான விஷயம் ஏன் இரண்டு பேரும் இப்படி இருக்கீங்க என கேட்க அப்படியெல்லாம் எதுவும் இல்லை என பார்த்திபன் கூறுகிறார். பிறகு பார்த்திபனின் அம்மா நாளைக்கு கோவிலில் சிறப்பு பூஜை செய்து விடலாம் என கூற மேலும் பார்த்திபனின் அப்பா வீட்டில் வேலை செய்பவர்கள், கம்பெனிகள் வேலை செய்பவர்கள், பக்கத்து வீட்டுக்காரர்கள் என அனைவருக்கும் ஸ்வீட் வாங்கி தருமாறு சொல்கிறார்.
இதனை அடுத்து பார்த்திபனின் அம்மா அவங்கள கொஞ்சம் தனியா விடலாம் விட்டா பேசிக்கிட்டே இருப்பீங்க என சொல்ல பிறகு பார்த்திபனை காவியாவை நல்லபடியாக பார்த்துக் கொள்ளுமாறு கூறிவிட்டு கிளம்புகிறார்கள். காவியா பார்த்திபனிடம் நீங்க இப்ப குழப்பமா இருக்கீங்க சீக்கிரம் என்ன புரிஞ்சிப்பீங்க உங்க மேல அளவு கடந்த அன்பு வச்சிருப்பேன் என்பதை தெரிந்து கொள்வீர்கள் என சொல்ல அதற்கு பார்த்திபன் நம்ம சண்டை நம்மளுக்குள்ளே இருக்கட்டும் வெளியில் தெரிய வேண்டாம் என சொல்கிறார்.
மறுபுறம் பிரியா ஜீவாவிற்கு ஃபோன் பண்ண எப்பொழுது வருவீங்க என கேட்கிறார் அதற்கு ஜீவா அதிக வேலை இருப்பதனால் லேட் நைட் ஆகும் என சொல்ல உங்களுக்கு ஏதாச்சும் வேண்டுமா என ஜீவா கேட்க அதற்கு பிரியா ஒரு மொழம் கௌரி வாங்கிட்டு வாங்க தொங்க என கூறி போனை வைக்கிறார் அதற்கு ஜிவா இவ என்னா லூசு மாதிரி பேசுறா என நினைக்கிறார்.
பிறகு பிரியா ஜீவா வந்தவுடன் ஏன் இதை தன்னிடம் மறச்சனு கேட்கணும் என நினைத்துக் கொண்டிருக்க இந்த நேரத்தில் தேவி வருகிறார். அப்பொழுது பிரியாவிடம் ஒரு பொண்ணு தான் கர்ப்பமாக இருந்தால் தனது கணவனிடம் சொல்ல வேண்டும் என தான் நினைப்பால் அப்படி இல்லை என்றால் அவங்க அம்மா, அப்பா கிட்ட சொல்லலாம் ஆனால் காவ்யா ஏன் சம்பந்தமே இல்லாமல் ஜீவா கிட்ட சொல்லணும் என அதை இதையும் சொல்லி ஏத்தி விட பிரியா மேலும் கோபம் அடைகிறார்.
எனவே பிரியா ஜீவாவின் போட்டோவை பார்த்துக் கொண்டு என்ன பாட்டுக்கு விட்டு இருந்தால் நான் தனியா நிம்மதியா இருந்து இருப்பல ஏன்டா என்னை இப்படி ஏமாத்துற எனக்கூறி புலம்புகிறார். பிறகு லைட்டு கூட போடாமல் இருட்டில் உட்கார்ந்து கொண்டிருக்க ஜீவா வருகிறார் என்ன ஆச்சு பிரியா ஏன் லைட் கூட போடாம ஒக்காந்து இருக்கீங்க என கேட்க ஒரு சான்ஸ் கூட உன்னை நல்லா பாத்துக்குறேன் என என்னென்னல்லாம் சொன்ன சத்தியம் கூட பண்ணுன ஆனால் இப்படி என்னை ஏமாத்திட்டியே என்ன சொல்ல அதற்கு ஜீவா என்னன்னு சொல்லாம திட்டுனா எப்படி என கேட்கிறார்.
பிறகு ஏன் காவியா கர்ப்பமாக இருப்பதை மறச்ச என கேட்க நான் மறைக்கல காவியா என்னிடம் அவக கர்ப்பமா இருக்கிறத சொல்லல நான் என்னோட நண்பர அழைச்சிகிட்டு ஹாஸ்பிட்டல் போனேன். அங்க நர்ஸ் தான் காவியா கர்ப்பமாக இருப்பதை சொன்னாங்க என கூறுகிறார். நீ சொல்ற கதை எல்லாம் நான் நம்புவேன்னு நினைச்சியா உன் பொய்யிலா எனக்கு வேண்டாம் என சொல்ல அதற்கு இதுதான் உண்மை என ஜீவா கூறுகிறார். காவியா கர்ப்பமாக இருப்பதை பார்த்திபன் கிட்ட சொல்றதோ சொல்லாததோ அவர்களுடைய இஷ்டம் நீ ஏன் என்கிட்ட சொல்லல எனவே தான் புரிந்து கொள்ளாமல் கோபப்பட இதோடு இன்றைய எபிசோடு நிறைவடைகிறது.