நம்பாமல் தாலியை கழட்ட நினைத்த பார்த்திபன்.! வீட்டை விட்டுப் போக தயாரான காவியா.. ஈரமான ரோஜாவே 2 சீரியல் இன்றைய எபிசோட்

eramana rojave
eramana rojave

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஈரமான ரோஜாவே 2 சீரியலில் இன்றைய எபிசோடில் பார்த்திபனின் அத்தை உன்கிட்ட ஒன்னு சொல்ல வேண்டும் நான் கேள்விப்பட்டேன் விஷயத்துக்காக உனக்கு வாழ்த்துக்கள் கூற வேண்டும் என கூறிக் கொண்டிருக்க அந்த நேரத்தில் காவியா கர்ப்பமாக இருப்பதாக சொல்ல இதனை நம்பாத பார்த்திபன் காவியா கர்ப்பமாக இருந்தால் என்னிடம் சொல்லியிருப்பா எனக் கூற இதனை எல்லாம் மாடியில் இருந்து பிரியா கேட்டு அதிர்ச்சி அடைகிறார்.

பிறகு பார்த்திபன் காவியாவை பார்ப்பதற்கு செல்ல இந்த நேரத்தில் பிரியா தனது ரூமிற்குள் ஒளிந்து கொள்கிறார். அப்பொழுது ஜீவா காவியா கன்சீவ்வா இருக்கிற விஷயத்தை ஏன் நம்ம கிட்ட சொல்லல காவியா கன்சீவ்வா இருக்கிற விஷயத்தை ஏன் பார்த்தி கிட்ட சொல்லல ஏன் ஜீவாவும் காவியாவும் இதனை மறைக்குறாங்க காவியா கன்சீவ்வா இருக்கிற விஷயத்தை முதல்ல பார்த்திபன்ட தான சொல்லி இருக்கணும் அட்லீஸ்ட் அத்தை மாமா கிட்டயாச்சும் சொல்லி இருக்கணும்  இல்லைனா அப்பா அம்மா கிட்ட சொல்லி இருக்கலாம் ஆனா யார்கிட்டயும் சொல்லாம ஜீவா கிட்ட மட்டும் சொல்லி இருக்கா ஜீவாவும் நம்ம கிட்ட இருந்து இந்த விஷயத்தை மறச்சி இருக்காரு இங்கு என்னதான் நடக்குது காவியா ஏன் ஜீவா கிட்ட சொன்னா அப்பனா ஜீவா மனசு மாறிட்டான்னு சொன்னது எல்லாம் பொய்யா காவியாவும் ஜீவாவும் ஏதோ நம்மகிட்ட இருந்து மறைக்கிறாங்க ஏன் இவ்வாறு மறைக்கணும் ஒரே குழப்பமா இருக்கு என யோசிக்கிறார்.

இந்த நேரத்தில் பார்த்திபன் ரூமிற்கு சென்றவுடன் காவியா தற்பொழுது கண்ணு சரியாகி விட்டதாக கூற அதற்கு பார்த்திபன் கோபமாக பார்த்துக் கொண்டிருக்கிறார். ஏன் அப்படி பாக்குறீங்க எனக்கு தான் கண்ணு சரியாயிடுச்சு எனக்கு தூசி விழுந்ததுக்கே உங்களால தாங்க முடியல உங்களுக்கு என் மேல பாசம் இல்லாமல் இல்லை என சொல்ல இந்த நேரத்தில் பார்த்திபன் காவியா நீ கன்சீவ்வா இருக்கியா சொல்லு என கூறியவுடன் காவியா அதிர்ச்சி அடைகிறார்.

அதன் பிறகு ஆமாம் பார்த்தியென உண்மையை கூறிவிடுகிறார் எவ்வளவு சந்தோஷமான விஷயத்தை ஏன் என்கிட்ட சொல்லல உனக்கு என் மேல பாசமே இல்ல எனக் கூறுவதற்கு காவியா அப்படி எல்லாம் கிடையாது பார்த்தி. உங்கள்ட்ட இத பத்தி சொல்லாததற்கு காரணம் நீங்க தான் கோவமா இருந்ததால இதனைப் பற்றி சொன்னா எப்படி எடுத்துப்பீங்களோனு எனக்கு தெரியல அதனாலதான் நான் சொல்லல உங்களுக்கும் கோபம் போனதும் உங்க கிட்ட சொல்லலாம்னு நெனச்சேன் ஆனா அதுக்குள்ள உங்களுக்கு தெரிஞ்சு போச்சு சரி நான் கன்சீவ்வா இருக்கிற விஷயத்தை யார் உங்க கிட்ட சொன்னா என கேட்க தேவி சொன்னதாக கூறுகிறார்.

இது வரைக்கும் நிறைய கெட்டது செஞ்சிருக்காங்க தான் ஆனால் என் விஷயத்துல மட்டும் நல்லது செய்றாங்களோனு தோணுது அவங்க மட்டும் சொல்லாம இருந்தா நான் உன்கிட்ட ஏமாந்து கிட்டு தான் இருந்து இருப்பேன் என சொல்ல அதற்கு காவியா கோபப்பட்டு உங்ககிட்ட எல்லாத்தையும் சொல்ல தயாராக தான் இருந்தேன் ஆனா அதற்குள்ள நமக்குள்ள பிரச்சனை வரணும் என்பதற்காக தான் இப்படி பண்ணி இருக்காங்க என சொல்ல அதற்கு பார்த்திபன் நீ செஞ்ச தப்புக்கு மத்தவங்க மேல பழி போடாத என்னோட ரெண்டு உயிர் உன் வயித்துல வலந்துக்கிட்டு இருக்கு அது எவ்வளவு சந்தோஷமான விஷயம் அது என்கிட்ட நீ சொல்லல அப்புறம் எதுக்குடி இந்த தாலி புருஷன் பொண்டாட்டி என்கிற வேஷம் எல்லாம் என தாலியை பிடிக்க காவியா எடுத்து விடுகிறார்.

இத்தனை நாளா என்னை ஏமாத்திக்கிட்டு இருந்திருக்கல என சொல்ல அதற்கு காவியா உங்க கிட்ட சொல்ல வந்த ஆனால் அதைக் கேட்கிற மனநிலை ஏன் இல்லை என கூற அதற்கு பார்த்தி நிறுத்து உன்னை பார்க்கவே வெறுப்பா இருக்கு எந்த ஒரு மனைவியும் அவ புருஷனுக்கு தராத ஒரு தண்டனையை நீ எனக்கு கொடுத்துட்ட என்ன நீ பெயருக்கு தான் புருஷன்னு சொல்ற ஆனா உன் மனசுல நான் அப்படி இல்லையே எனக் சொல்லிவிட்டு கோபத்தில் போட்டோவை எடுத்து உடைக்கிறார்.

இப்படி எல்லாம் பண்ணாதீங்க எனக் கூற அதற்கு நீங்கள் இருந்து கிளம்பு என பார்த்திபன் சொல்கிறார். மேலும் என்னுடைய குழந்தைகளைப் பற்றிய என்னிடம் சொல்லாததற்கு காரணம் இதுவா கூட இருக்கலாம் அதாவது வயிற்றிலேயே அழிச்சிடலாம் என நினைச்ச எனக் கூற அதற்கு காவியா அதிர்ச்சடைகிறார். பார்த்திபன் பேச கோபப்பட்ட காவியா நிறுத்தங்கள் பார்த்தி நான் உங்ககிட்ட இத சொல்லாததற்கு காரணம் நீங்கள் மட்டும் தான் அந்த தேவி சொன்ன எல்லாத்தையும் நம்புறீங்க நான் சொல்றத நம்ப மாட்டீங்களா ஜீவாவை காதலிச்சா காரணத்தினால் இவ்வளவு நாளா என்ன வெறுத்தீங்க இப்போ புதுசா ஒரு காரணத்தை பாக்குறீங்க என் மனசு ஃபுல்லா நீங்க தான் இருக்கிறீங்க நான் செத்தாலும் உங்க மனைவியா தான் சாகுவேன் இப்பவும் என்னை நீங்க நம்பலைனா நீங்க கட்டுனா இந்த தாலிய காழட்டிட்டு என்ன இந்த வீட்டை விட்டு அனுப்பி விடுங்க என கூற பார்த்திபன் அப்படியே நிற்கிறார் இதோடு எபிசோடு நிறைவடைகிறது.