விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஈரமான ரோஜாவே 2 சீரியல் தொடர்ந்து பல திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வரும் நிலையில் இன்றைய எபிசோடில் பார்த்திக்காக காவியா சமைத்து வைத்திருந்த உணவுகளை ஜீவா அனைத்தையும் சாப்பிட்டு விடுகிறார். சாப்பிட்டுவிட்டு பிரியாவை கூப்பிட்டு அவருடைய கையில் முத்தம் கொடுத்து இந்த கைக்கு தங்க மோதிரம் இல்லை வளையல் தான் போட வேண்டும் கூடிய சீக்கிரம் போடுவதாக சொல்லிவிட்டு கிளம்பி விடுகிறார்.
உடனே ப்ரியா எப்பொழுதும் செய்வது போல தானே செஞ்சோம் என டைனிங் டேபிள் வந்து பார்க்க பிரியா செய்து வைத்த அனைத்தும் அப்படியே இருக்கிறது. இந்த நேரத்தில் வந்த காவியா தன்னுடைய உணவுகள் அனைத்தும் காணவில்லை யார் சாப்பிட்டா பார்த்திக்காக பார்த்து பார்த்து செஞ்சேனே எனக் கூறிக் கொண்டிருக்க இந்த நேரத்தில் கார் சாவியை எடுக்க வந்த ஜீவா சாப்பாடு சூப்பராக இருந்ததாக பாராட்டிவிட்டு செல்ல பிரியா கோபம் அடைகிறார்.
மேலும் காவியா யாரு சாப்பிட்டால் என்ன நான் மீண்டும் பார்த்திக்காக சமைக்கிறேன் எனக் கூறிவிட்டு சென்று விடுகிறார். பிரியா நம்ம சமைச்சத சாப்பிடாம அவ சமச்சத சாப்பிட்டு அவ முன்னாடியே பாராட்டிட்டு போறாரே நைட் வரட்டும் பாத்துக்குறேன் என மனதிற்குள் நிற்கிறார்.
இதனை அடுத்து காவியா கிளாஸுக்கு கிளம்பி விட்டு டைனிங் டேபிள் வந்து மாத்திரை முழுங்குகிறார் அப்பொழுது அவர் எடுத்து வந்த மருந்து சீட்டை டைனிங் டேபிளில் வைத்து விட்டு செல்ல இந்த நேரத்தில் பார்த்திபன் அத்தை சாப்பிடுவதற்காக வருகிறார். அந்த சீட்டை பார்த்துவிட்டு இதன் மூலம் காவியா கர்ப்பமாக இருப்பதை தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக மருத்துவமனைக்கு செல்கிறார்.
மருத்துவர் இவருடைய தோழி என்பதால் காவியா கர்ப்பமாக இருப்பதையும் அவருக்கு ட்வின்ஸ் பேபி என்பதையும் சொல்ல பக்கத்தில் இருந்த நர்ஸ் இது ஜீவாவுக்கும் தெரியும் என சொல்ல இதனை வீட்டில் இருப்பவர்களிடம் சொல்லவில்லையா எனக் கேட்டவுடன் அதற்கு அவர் சொல்லியிருந்தால் எங்களுக்கு தெரிந்திருக்குமே எனக் கூறிவிட்டு கிளம்புகிறார்.
இதனை அடுத்து பிரீயா கிச்சனில் சமைத்துக் கொண்டு இருக்க இந்த நேரத்தில் காவியா என்ன சமைச்சு கிட்டு இருக்க என கேட்கிறார். பிரியா அதற்கு கீரை மற்றும் வத்த குழம்பு இருப்பதாக சொல்ல எனக்கு கீரைனா ரொம்ப பிடிக்கும் எனவே கீரை கொஞ்சம் வத்த குழம்பு தரியா நான் மீன், சிக்கன், மட்டன் என நிறையா வாங்கிட்டு வந்து இருக்க அதுல உனக்கு வேணும்னா எடுத்துக்க என எதார்த்தமாக சொல்ல அதற்கு பிரியா நான் யாருடையதற்கும் ஆசைப்பட மாட்டேன் அதேபோல் என்னுடையதையும் விட்டு தர மாட்டேன் என குதர்க்கமாக பேசுகிறார்.
இதற்கு காவியா மனதில் நீ ஏதோ நினைச்சுக்கிட்டு பேசுறேன்னு நினைக்கிற என்ன சொல்ல அதற்கு அப்படி எல்லாம் கிடையாது உன்னுடையத வச்சு நீயே சமைச்சுக்கோ என கூற அதற்கு சத்தியமா இனிமே கேட்க மாட்டேன் என காவியா சொல்லிவிடுகிறார். பிறகு நான் சமைத்து விட்டேன் நீ சமைத்துக் கொள் எனக் கூறிவிட்டு பிரியா கிளம்ப காவியா சமைக்கிறார்.
அப்பொழுது மீன் எண்ணெயில் போடும் பொழுது அவருடைய கண்ணில் பட்டுவிடுகிறது எனவே எரிச்சல் தாங்க முடியாமல் வெளியில் வர பார்த்தி என்ன ஆச்சு என கேட்கிறார் அப்பொழுது நடந்ததை சொல்ல பிறகு பார்த்திபன் கண்ணில் மருந்து போட்டு விடுகிறார். இதற்கு காவியா தேங்க்ஸ் என கூற இந்த நேரத்தில் பார்த்திபனுக்கு போன் வந்து விடுகிறது.
பார்த்திபனின் அத்தை காவியாவை பார்த்துக் கொண்டே மனதிற்குள் இந்த வீட்டில் இருந்து உன்னை துரத்தலான பார்த்தா இரட்டை குழந்தைய வச்சிருக்கியா இந்த வீட்ல இருந்து உன்ன தொரத்தாம விட மாட்டேன் என நினைக்கிறார். பிறகு பார்த்திபனிடம் சென்று ஒரு விஷயம் கேள்விப்பட்டேன் அதுக்கு வாழ்த்து கூட்டிட்டு போலாம்னு வந்தேன் என சொல்ல அப்பொழுது காவியா கர்ப்பமாக இருக்கிறாள் எனக் கூற கர்ப்பமாக இருந்தா என்கிட்ட சொல்லி இருப்பா எனக் கூறுகிறார். உன்கிட்ட சொல்லவில்லை என்றால் என்ன ஜீவாவுக்கு காவியா கர்ப்பமாக இருப்பது தெரியும் என கூறி விடுகிறார் பிறகு நாளை எபிசோடில் இதனைப் பற்றி காவியாவிடம் பார்த்திபன் கேட்க இருக்கிறார்.