கர்ப்பமாக இருப்பதை மறைக்கும் காவியா.? விரைவில் பிரிய வேண்டும் என கூறும் பார்த்திபன்.. ரம்யா சொன்னதை ஜீவாவிடம் போட்டு உடைத்த பிரியா

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஈரமான ரோஜாவே 2 சீரியல் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் தற்போது பிரியா ஜீவாவின் வீட்டில் ஒரு வழியாக தாங்க சமாதித்திருக்கிறார். ஜீவா காவியாவை காதலித்ததை தன்னிடம் மறைத்து விட்டதால் தனக்கு துரோகம் செய்து விட்டதாக கூறிவிட்டு வீட்டை விட்டு கிளம்பினார்.

ஜீவா எப்படியாவது பிரியாவின் மனதை மாற்றி தன்னுடைய வீட்டிற்கு அழைத்து வரவேண்டும் என பல முயற்சிகளை செய்தும் அதில் தோல்வி அடைந்தார். இப்படிப்பட்ட நிலையில் சமீபத்தில் காவியாவிற்கு தாலி கோர்க்கும் நிகழ்ச்சி நடைபெற்றது அதில் பிரியா பங்குப் பெற்ற நிலையில் அப்பொழுது வீட்டில் இருப்பவர்கள் அவரைப் போக வேண்டாம் என தடுத்தனர்.

ஜீவாவும் அனைத்து குற்றவாளிகளுக்கும் ஒரு வாய்ப்பு கொடுப்பார்கள் அதேபோல் எனது தனக்கும் ஒரு வாய்ப்பு கொடுக்குமாறு கேட்க பிரியா வீட்டில் இருக்க சம்மதித்து இதற்கு மேல் ஜீவா சின்ன தப்பு செய்தாலும் நான் விவாகரத்து செய்துவிட்டு கிளம்பி விடுவேன் என கூறிவிட்டார். இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது ரம்யா பிரியாவை கூப்பிட்டு ஆசை ஆசையாய் காதலித்த ஜீவாவும் காவியாவும் ஒரே வீட்டில் இருக்கிறார்கள் காதலிக்கும் பொழுது திருமணத்திற்கு பிறகு எப்படி எல்லாம் வாழ வேண்டும் என பேசி இருப்பார்கள் இப்படிப்பட்ட நிலையில் நான்கு பேரும் மாறி மாறி திருமணம் செய்து கொண்டீர்கள் தற்பொழுது நான்கு பேரும் பிரிந்து வாழ்ந்து மகிழ்ச்சியாக இல்லை அனைவர் முன்பும் மகிழ்ச்சியாக இருப்பது போல் நடிக்கிறீர்கள் என கூறி பிரியாவை கோபப்படுகிறார்.

இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் பார்த்திபன் காவியாவிடம் நீ சீக்கிரம் ஐஏஎஸ் பாஸ் பண்ண வேண்டும் அப்புறம் தான் நாம தனித்தனியா பிரிஞ்சு வாழலாம் நீ ஏன் ஐஏஎஸ் ஆக வேண்டும் என நான் நினைக்கிறேன் தெரியுமா அதன் பிறகு நீ உங்களால்தான் என்னுடைய கெரியர் போய்விட்டதாக கூறக்கூடாது என்பதற்காக தான் என்ன சொல்கிறார்.

இந்த நேரத்தில் காவியாவிற்கு வாந்தி வர காவியா நான் கன்சிவா இருக்கிற விஷயத்தை இப்போது சொல்ல மாட்டேன் என்னுடைய பழைய பார்த்தியை பார்க்கும் பொழுது தான் சொல்லுவேன் நீங்க எப்பொழுது மாறுவீங்களோ என மனதிற்குள் நினைக்கிறார். பிறகு ஏன் ஒரு வாரமாக உனக்கு வாந்தி வருது இப்பெல்லாம் டயர்டா இருக்க நாளைக்கு ஹாஸ்பிடல் போகலாம் எனக் கூற  காவியா முடியாது எனக்கு ஏன் வாந்தி வருது என தெரியும் நான் ஹோட்டலில் சாப்பிட்டேன் அது ஃபுட் பாய்சன் ஆயிடுச்சு என சொல்கிறார். உனக்கு தான் ஹோட்டல்ல சாப்பிடுறது ஒத்துக்கொள்ள ஏன் சாப்பிடுற எனக் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

மறுபுறம் ஜீவா கேம் விளையாண்டு கொண்டிருக்க இந்த நேரத்தில் பிரியா வர உங்களுக்கு இதுதான் முக்கியமா உலகத்தில் எவ்வளவு பிரச்சனை இருக்கு என கூற அதற்கு ஜீவா ஏன் வந்ததும் சுடுதண்ணி ஊத்தினது போல் கத்துருங்க என சொல்ல அதற்கு ரம்யா தன்னிடம் கூறிய அனைத்தையும் ஜீவாவிடம் கூறுகிறார்.