கர்ப்பமாக இருக்கும் காவியா.! குழந்தையை ஏற்றுக் கொள்வாரா பார்த்தி? பிரியாவின் மனதில் விஷத்தை விதைக்கும் ரம்யா

eramana-rojave
eramana-rojave

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஏராளமான சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் தற்பொழுது மிகவும் விறுவிறுப்பாக பல திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியல் தான் ஈரமான ரோஜாவே 2. இந்த சீரியலில் காவியா ஜீவா காதலித்த உண்மை பிரியா பார்த்திபனுக்கு தெரிய வந்திருக்கும் நிலையில் இதனால் பல பிரச்சனைகள் அரங்கேறி வருகிறது.

அதாவது பார்த்திபன் காவியாவை ஏற்றுக் கொண்டது போலவே நடிக்க வருகிறார் மறுபுறம் ஜீவா தனக்கு அனைத்து உண்மையையும் மறைத்து துரோகம் செய்து விட்டதாக பிரியா வெறுத்து வருகிறார். எனவே பிரியா தன்னுடைய வீட்டில் இருந்து வந்த நிலையில் சமீபத்தில் காவியாவுக்கு தாலிக்கோர்க்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் பிரியா பங்கு பெற்ற நிலையில் பிறகு பிரியா அவருடைய வீட்டிற்கு செல்வது தனக்கு பிடிக்கவில்லை என ஜீவாவின் அப்பா கூற பிறகு ஜீவா தப்பு செஞ்ச அனைவருக்கும் ஒரு வாய்ப்பு கொடுக்க வேண்டும் அதேபோல தனக்கும் ஒரு வாய்ப்பு தருமாறு கேட்கிறார்.

வீட்டில் இருப்பதாக ஒப்புக்கொண்டு ஜீவாவிற்கு இதுதான் நான் கொடுக்கும் கடைசி வாய்ப்பு இதற்கு மேல் சின்ன தப்பு செய்தாலும் அவருடன் நான் இருக்க மாட்டேன் விவாகரத்து தான் என கூறி விடுகிறார். இப்படிப்பட்ட நிலையில் இன்றைய எபிசோடில் பிரியா விடம் தனியாக பேச வேண்டும் என ரம்யா கேட்கிறார். அப்பொழுது ரம்யா பிரியாவிடம் என்னதான் அனைவரும் மாத்தி மாத்தி கல்யாணம் செஞ்சுக்கிட்டாலும் காவியாவும் ஜீவாவும் தற்போதும் அவர்கள் பார்த்துக் கொள்ளும் போது அந்த காதல் வரும் என அதை இதையும் கூறி பிரியாவின் மனதை கஷ்டப்படுத்துகிறார்.

காதலிக்கும் பொழுது எப்படி எல்லாம் வாழ வேண்டும் என பேசி இருப்பார்கள் என கூறுகிறார். மறுபுறம் காவியா மருத்துவமனைக்கு சென்று இரண்டு, மூன்று நாட்களாக கொமட்டல், வாந்தி, தலை சுத்தல் இருப்பதாக கூற செக் பண்ணி பார்க்கும் பொழுது அவர் கர்ப்பமாக இருப்பது தெரிய வருகிறது. காவியா பார்த்திபன் குழந்தை என்னுடைய வயிற்றில் வளர்கிறதா என நினைத்து மகிழ்ச்சி அடைகிறார். இவ்வாறு பார்த்தி அந்த குழந்தையை ஏற்றுக் கொள்வாரா என்பது கேள்விக்குறியாக இருந்து வருகிறது.