உயிருக்கு போராடிக் கொண்டிருந்த தனது கணவரை ஒரே வார்த்தையில் கண் விழிக்க வைத்த காவியா.! மகிழ்ச்சியில் குடும்பத்தினர்கள்.. ஈரமான ரோஜாவே 2 இன்றைய எபிசோட்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியல் இன்று தான் ஈரமான ரோஜாவே 2. இந்த சீரியல் அறிமுகமான கால கட்டத்தில் பொழுது வரையிலும் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் தற்பொழுது எதிர்பாராத பல திருப்பங்கள் சமீப காலமாக அரங்கேறி வருகிறது.

அதாவது ஜீவா பிரியாவின் காதலை புரிந்து கொண்டு அவருக்காக மாறிவரும் நிலையில் பார்த்திபன் காவியாவை மாற்ற வேண்டும் என்பதற்காக பல முயற்சிகளை செய்து வருகிறார் ஆனால் காவியா பிடிவாதமாக பார்த்திபன் வேண்டாம் என்ற முடிவில் இருந்து வருகிறார் இதன் காரணத்தினால் பார்த்திபனின் அம்மா பார்த்திபனை விட்டு தள்ளி இருக்குமாறு காவியாவிடம் கூறுகிறார்.

இப்படிப்பட்ட நிலையில் எப்படியாவது காவியாவின் மனதை மாற்ற வேண்டும் என்பதற்காக கோவிலுக்கு செல்கிறார் பார்த்திபன் மேலும் அதே கோவிலுக்கு காவியாவும் செல்கிறார் இருவரும் எதிர்பாராத விதமாக ஒரே கோவிலுக்கு சென்று கொள்ளும் நேரத்தில் சந்தித்துக் கொள்கிறார்கள் இருவரும் சண்டை போடுவது போல் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

பார்த்திபன் காவியாவிடம் உன்னை இன்ஸ்டியூட்டில் விட்டு விடுகிறேன் என கூறுகிறார் பிறகு இருவரும் இணைந்து இன்ஸ்டிடியூட்டிற்கு செல்கிறார்கள். போகும் பொழுது காவியா வீட்டிற்கு வந்து உங்களிடம் ஒன்று சொல்ல வேண்டும் என கூறுகிறார்.பிறகு பார்த்திபன் காவியா என்ன சொல்ல போகிறார் என்பதை நினைத்துக் கொண்டு போய்க் கொண்டிருக்கும் நேரத்தில் காவியாவின் இன்ஸ்டிடியூட்டில் தீ விபத்து ஏற்படுகிறது.

இதனால் அவரை சுற்றி தீ சூழ வெளியில் வர முடியாத காரணத்தினால் பார்த்திபனுக்கு போன் செய்து கூறுகிறார். பிறகு பார்த்திபனும் அனைத்து தடைகளையும் தாண்டி பல மணி நேரம் போராடி காவியாவை தூக்கிக்கொண்டு வெளியில் வந்து விடுகிறார். இதன் காரணத்தினால் பார்த்திபனுக்கும் தீ விபத்து ஏற்பட்டுள்ள நிலையில் இருவரையும் மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்கள்.

காவியா கிருப்டிக்கலான சிச்சுவேஷனில் இருந்து தற்பொழுது கண்விழித்துள்ளார். இதனைத் தொடர்ந்து டாக்டர் பார்த்திபன் மிகவும் மோசமான நிலைமையில் இருப்பதாகவும் அவருடைய பல்ஸ் குறைவதாகவும் கூறியதால் அனைவரும் அதிர்ச்சடைகிறார்கள். எனவே பார்த்திபனை பார்த்து அனைவரும் அழுது கொண்டிருக்கும் நேரத்தில் காவியா பார்த்திபனின் கிட்டே போய் என்னை பாருங்க நான் காவியா வந்து இருக்கேன் என கூற உடனே பார்த்திபன் கண் திறக்கிறார்.

காவியா சிரிப்பதை பார்த்த பார்த்திபன் காவியாவின் கையைப் பிடித்து அழுகிறார் இவ்வாறு பார்த்திபன் உயிர் பிழைத்துள்ள நிலையில் அனைவரும் மகிழ்ச்சியடைகிறார்கள் மேலும் இதற்கு மேல் காவியா பார்த்திபனை ஏற்றுக் கொண்டு மகிழ்ச்சியாக வாழ்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.