நமக்கு சோறு தான் முக்கியம் என வெக்கமே இல்லாமல் ஓடி வந்த காவியா.! பார்த்திபனின் புதிய ட்ரீக்.. ஈரமான ரோஜாவே 2 சீரியல் இன்றைய எபிசோட்

eramana rojave 1
eramana rojave 1

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வரும் நிலையில் தற்போது முதல் பாகம் வெற்றி பெற்ற காரணத்தினால் இரண்டாவது சீசனையும் அறிமுகப்படுத்திய ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து வரும் சீரியல்தான் ஈரமான ரோஜாவே 2.

இந்த சீரியல் 2கே கிட்ஸ்களை கவர வேண்டும் என்பதற்காக பல காட்சிகள் சுவாரசியமாக வெளியாகி வருகிறது. அதாவது ஜோடிகள் மாறி திருமணம் நடந்துள்ள நிலையில் அந்த வாழ்க்கையை எப்படி அவர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள் என்பதினை மையமாக வைத்து தான் இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.

பிரியா ஜீவாவை தொடர்ந்து காதலித்து வரும் நிலையில் ஜீவாவும் பிரியாவிற்காக தனது மனதை மாற்றிக் கொண்டு வருகிறார். அதோடு மட்டுமல்லாமல் பிரியா வெளிப்படையாக ஜீவாவிடம் ரொமான்ஸ் செய்வதை வழக்கமாக வைத்திருக்கிறார் இதன் காரணமாக பிரியா மாற்றம் ஜீவா ரசிகர்களின் ஃபேவரட் ஜோடிகளாக இருந்து வருகிறார்கள்.

இவர்களைத் தொடர்ந்து ஒரு பக்கம் பார்த்திபன் காவியாவின் மனதை எப்படியாவது மாற்ற வேண்டும் என பல முயற்சிகளை செய்து வருகிறான் ஆனால் காவியா நான் டிவோர்ஸ் செய்து தான் ஆகுவேன் என பிடிவாதமாக இருந்து வருகிறார். மேலும் பார்த்திபனின் அம்மாவிற்கு காவியா திருமணத்திற்கு முன்பு வேறு ஒருவரை காதலித்தார் என்பது தெரிய வந்துள்ள நிலையில் பார்த்திபனின் அம்மாவும் எனது மகனை விட்டு எப்படியாவது விலகிவிடு என கூறி வருகிறார்.

ஆனால் பார்த்திபன் இருக்க இருக்க காவியாவின் மீது தனது காதலை வெளிப்படுத்தி வருகிறார். இப்படிப்பட்ட நிலையில் காவியா பார்த்திபனிடம் சரியாக பேசாமல் சண்டை போட்டு வரும் நிலையில் பார்த்திபன் சிக்கன் லாலிபாப், சிக்கன் 65 என அனைத்தையும் டேபிள் மேல் வைத்துக்கொண்டு காவியாவை சாப்பிட அழைக்கிறார்.

ஆனால் காவியா பிடிவாதமாக வராமல் இருந்து வருகிறார் எனவே எப்படியாவது காவியாவை அழைக்க வேண்டும் என்பதற்காக போட்டோ எடுத்து காவியாவின் வாட்ஸ் அப்பில் அனுப்புகிறார் அதோடு மட்டுமல்லாமல் வாசம் ரூமிற்கு வீசியதால் சோறு தான் நமக்கு முக்கியம் என வந்து சூப்பரா இருக்கு என சொல்லிவிட்டு அனைத்தையும் சாப்பிடுகிறார். இவ்வாறு சோறு மட்டும் பார்த்திபன் தந்தால் சாப்பிடுவதற்கு வரும் இவர் ஏன் பார்த்திபனை ஏற்றுக்கொள்ளக் கூடாது என ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.