விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஏராளமான சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துவரும் நிலையில் தற்போது உள்ள இளசுகளின் மனதை கவர்ந்துள்ள சீரியல் தான் ஈரமான ரோஜாவே 2. இந்த சீரியலில் அனைத்து கேரக்டர்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
அந்த வகையில் எப்பொழுது ஜோடி மாற்றி திருமணம் நடைபெற்றது அதிலிருந்து மிகவும் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. அதிலும் முக்கியமாக ஜீவா மற்றும் பிரியா இவர்களின் ஜோடி ரசிகர்களை மனம் கவர்ந்த ஜோடிகளாக திகழ்கிறார்கள். மிகவும் க்யூட்டாக இருப்பதாகவும் ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.
பிரியா ஜீவாவின் மனதை மாற்ற வேண்டும் என முயற்சி செய்து வந்த நிலையில் மேலும் ஜீவாவை காதலிப்பது போல் பல சேட்டைகளை செய்து வந்தார் இதனைப் பார்த்த ஜீவாவும் தனது மனதை மாற்றிக்கொள்ள வேண்டும் எனவும் பிரியாவிற்கு பிடித்ததை செய்ய வேண்டும் எனவும் முடிவெடுத்துள்ள நிலையில் பிரியாவிற்கு பல சர்ப்ரைஸ் களை கொடுத்து வருகிறார்.
இவ்வாறு இவர்கள் நடந்ததை புரிந்து கொண்டு மாறிவுள்ள நிலையில் காவியா மாறாமல் நான் பார்த்திபனை பிரிந்து விடுவேன் என கூறிய வருகிறார் மேலும் பார்த்திபன் காவியாவின் மனதை மாற்ற வேண்டும் என்பதற்காக பல முயற்சிகளை செய்து வருகிறார் ஆனால் காவியா அதனை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் டிவோர்ஸ செய்வதில் குறியாக இருந்து வருகிறார்.
பார்த்திபன் தொடர்ந்து காவியாவிற்காக பல விஷயங்களை செய்து வரும் நிலையில் இதனைப் பார்த்த பார்த்திபனின் அம்மா மிகவும் வருத்தம் அடைகிறார் மேலும் காவியாவிடம் எப்படியாவது பார்த்திபனை வெறுக்கவை அவனை விட்டு தள்ளியே இரு எனக்கூறி வருகிறார்.
இந்நிலையில் சமீபத்தில் வெளிவந்த ப்ரோமோவில் பிரியா தனது கைகளில் மருதாணி வைத்து கொண்டு இருக்கிறார் எனவே காவியாவுக்கும் மருதாணி வைக்க வேண்டும் என ஆசைப்பட்ட பார்த்திபன் காவியா தூங்கிய பிறகு அவர்களின் மருதாணியை வைக்கிறார் வைத்தவுடன் எழுந்து பார்த்த காவியா பார்த்திபனிடம் என்ன இது என கேட்க மருதாணி வைத்தால் சூடு குறைந்து விடுமா அதனால் மருதாணி வைத்தேன் என்று கூறியவுடன் செவுளில் பாலார் என அறைகிறார் உடனே பார்த்திபன் அதிர்ச்சியடைந்து என்ன செய்வது என்று தெரியாமல் முழிக்கிறார்.