விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் நாடகங்கள் ஒவ்வொன்றும் தனக்கென தனி ஒரு வித்தியாசமான கதை தொகுப்பை பெற்றிருக்கும், அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் ஈரமான ரோஜாவே சீசன் 2 மக்கள் மத்தியில் பெரிதும் விரும்பப்படும் ஒரு நாடகமாக பார்க்கப்படுகிறது. இந்த நாடகத்தில் முக்கிய கதாபாத்திரமான, காவியா கதாபாத்திரத்தில் கேபிரில்லா நடித்து வருகிறார்.
இந்த நாடகத்தில் நடந்த பல்வேறு சம்பவங்களின் விளைவாக காவியா காதலித்த ஜீவாவை காவியாவின் அக்கா திருமணம் செய்து கொண்டார் காவியா ஜீவாவின் அண்ணனை திருமணம் செய்து கொண்டார், கொடுமையிலும் கொடுமை தன் காதலனை அல்லது காதலியை இன்னொருவருடன் வைத்து பார்ப்பது தான், இத்தகைய ஒரு கொடுமையை இந்த நாடகம் காட்டி வருகிறது.
ஆரம்பத்தில் ஜீவாவும் தனது திருமண வாழ்க்கையில் விருப்பம் இல்லாமல் தினமும் குடித்துவிட்டு ரோட்டில் விழுந்து கிடப்பார், அதேபோல காவியாவும் திருமண வாழ்க்கையில் விருப்பம் இல்லாமல் தினமும் அழுது கொண்டே இருப்பார்.இவ்வாறு சென்று கொண்டிருக்க ஜீவாவின் மனைவி தன்னுடைய முழு முயற்சியையும் ஈடுபடுத்தி ஜீவாவை மாற்றி திருமண வாழ்க்கையில் நிம்மதி அடைந்து வருகிறார்.
காவியா ஜீவாவை காதலித்த விஷயத்தைத் தெரிந்து கொண்ட காவியாவின் மாமியார், காவியாவை விடுதிக்கு சென்று படிக்க சொல்லி வற்புறுத்துகிறார், ஆனால் காவியா வீட்டை விட்டு வெளியே செல்ல மனமில்லாமல் தினமும் தன் காதலனை பார்த்து மனதிற்குள்ளேயே அழுது கொண்டு இருக்கிறார்.
இவ்வாறு சென்று கொண்டிருக்க காவியா எதார்த்தமாக ஜீவாவின் பெட்ரூமுக்குள் சென்றபோது பிரியா ஜீவாவின் மீது படுத்துக்கொண்டு ரொமான்ஸ் செய்யும் காட்சியை பார்க்கிறார், பார்த்தவுடன் வெளியே வருகிறார் வெளியே வந்த பின் தன் மனதிற்குள் அணு அணுவாய் நினைத்து பார்த்து கண் கலங்கி நிற்கிறார். நான் இருக்க வேண்டிய இடத்தில் என் அக்கா இருக்கிறாள் என்ற ஏக்கத்துடன் மனதில் அதிக வலியுடனும் காவியா கண் கலங்குகிறார்.
இவ்வாறு இருக்க,போற போக்கை பார்த்தால் காவியா தன் அக்காவுக்கே எதிரியாகி விடுவாள் போலயே என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.ரசிகர்கள் சொல்வது உண்மையாகி விட்டால் அதாவது அக்காவுக்கு தங்கச்சி எதிரி என்றால் நாடகம் சற்று விறுவிறுப்பாக தான் போகும்.