வீட்டை விட்டு காவியாவை துரத்தி விட மாமியார் போட்ட பிளான்.! எல்லாம் பார்த்திபனின் நல்லதுக்காகத் தான்..

eramana-rojave-2
eramana-rojave-2

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஏராளமான சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துவரும் நிலையில் சமீபத்தில் அறிமுகமாகிய ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வரும் சீரியல்தான் ஈரமான ரோஜாவே 2. இந்த சீரியலின் முதல் பாகத்தில் நடித்த திரவம் சீசன் இரண்டிலும் ஹீரோவாக நடித்து வருகிறார்.

இதனைத் தொடர்ந்து கேப்ரியல்லா முதன்முறையாக ஹீரோயினாக இந்த சீரியலின் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமாகியுள்ளார். இவர்களைத் தொடர்ந்து இன்னும் பல நட்சத்திர பட்டாளங்களும் சீரியலில் நடித்து வருகிறார்கள். ஜோடிகள் மாற்றி திருமணமானதிலிருந்து இந்த சீரியல் பல எதிர்பார்ப்புடன் மிகவும் சுறுசுறுப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில் பிரியா ஆரம்பத்தில் இருந்து ஜீவாவை காதலித்து வந்த நிலையில் தற்பொழுது ஜீவாவும் பிரியாவிற்காக தொடர்ந்து பல சப்ரைஸ்களை செய்து வருகிறார். இதன் மூலம் ஜீவா காவியாவை மறந்து பிரியாவை காதலிக்க ஆரம்பிக்க தொடங்கியுள்ளார் என்பது தெரிய வருகிறது.

அந்த வகையில் பிரியாவிடம் சொல்லாமல் சப்ரைஸ் தர வேண்டும் என்பதற்காக மல்லிகை பூ மற்றும் அல்வாவை வாங்கித் தந்தார். எனவே பார்த்திபன் இப்படி எல்லாம் செய்ய மாட்டேங்குறான் என அவருடைய அப்பா கலாய்த்த நிலையில் அடுத்த நாள் சீக்கிரமாக ஆபீஸிலிருந்து வந்து மல்லிகை பூ மற்றும் அல்வாவை வாங்கி எடுத்து வருகிறார்.

பிறகு தனது அம்மாவிற்கும் சேர்த்து வாங்கி வந்த நிலையில் மல்லிகை பூ மற்றும் அல்வாவை காவியாவிடம் கொடுக்கிறார். ஆனால் காவியா அந்த பூவை குப்பைத் தொட்டியில் போட்டு விடுகிறார். இதனை பார்த்த பார்த்திபன் எடுக்கப்போகும் நேரத்தில் அவருடைய அம்மா பார்த்துவிட தெரியாமல் காவியா குப்பைத்தொட்டியில் போட்டு விட்டாள் எனக் கூறுகிறார்.

பிறகு காவியாவை சந்தித்த பார்த்திபனின் அம்மா இங்கு இருந்தா நீ சரியா படிக்க மாட்ட நீ படிச்சி கலெக்டர் ஆக வேண்டும் எனவே நீ வெளியில் எங்கயாவது தங்கி படி என கூறுகிறார். பிறகு காவியா உங்களுக்கு நான் இந்த வீட்டில் இருக்கக் கூடாது அதுதானே அதனை நேராவே சொல்லுங்கள் எனக் கூறுகிறார்.

அதற்கு இவருடைய மாமியார் நீ இல்லை என்றால் ஆவது அவன் அமைதியாக இருக்கிறானா என பார்க்கலாம் அவன் பாவம் எனக் கூறுகிறார். இந்த நேரத்தில் ஜீவா பிரியா எக்ஸாமில் பாஸ்சான நிலையில் யாருக்கும் தெரியாமல் கேக் வந்து சப்ரைஸ் கொடுக்கிறார். எனவே இவ்வாறு ஜீவா செய்தது பிரியாவை கண்கலங்க வைக்கிறது இத்துடன் இன்று எபிசோடு முடிவடைகிறது.