விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது தற்பொழுது வித்தியாசமான கதையம் சத்துடன் ஒளிபரப்பாகி வரும் சீரியல்தான் ஈரமான ரோஜாவே 2. இந்த சீரியலில் எதிர்பாராத பல டூரிஸ்டிகள் இருந்து வரும் நிலையில் தற்போது காவியாவின் மனதை மாற்றுவதற்காக பார்த்திபன் பல முயற்சிகளை செய்து வருகிறார்.
காவ்யாவும் ஜீவாவின் மனதை ஓரளவிற்கு மாற்றியுள்ள நிலையில் ஜீவா காவியாவிற்கு பிடித்த சிலவற்றை செய்து வருகிறார். சமீபத்தில் ரவுடி ஒருவன் குழந்தையை கடத்தி வைத்துக் கொண்டு ஒரு டாக்குமெட்டை தந்தால் குழந்தையை விடுவேன் என மிரட்டிய நிலையில் தற்போது அந்த பிரச்சனை அனைத்தும் முடிந்துள்ளது.
அதன் பிறகு காவியா வேறு ஒருவரை காதலிப்பதை அறிந்து கொண்ட பார்த்திபனின் அம்மா இதற்கு மேல் பார்த்திபன் இவனை விட்டு இன்னும் விலகிவிடு அவனே உன்னை வேணாம் என சொல்ல வை எனக் கூறுகிறார். அதன் பிறகு பார்த்திபன் காவியாவை ஓவியமாக வரைந்த நிலையில் அதனைப் பார்த்த பார்த்திபனின் அம்மா கவலைப்படுகிறார்.
காவியாவை அழைத்து சென்று அந்த புகைப்படத்தை பார்த்து உன்னை எந்த அளவிற்கு காதலிக்கிறான் என பாரு என்று கூறுகிறார். இன்று வெளியாகியுள்ள எபிசோடில் ஜீவா வெளியில் செல்ல சட்டை ஒன்றை போடுகிறார் அவ்வப்பொழுது சட்டையில் இருந்த பட்டன் பிச்சி கொள்கிறது நீ பார்த்த காவியா இப்படியேவா வெளியில் போவீங்க என கூறிவிட்டு சட்டையில் பட்டனை தைத்து விடுகிறார்.
பிறகு பார்த்திபன் காவியாவை வரைந்ததை பரிசாக காட்டுகிறார். ஆனால் காவியா அதனை எல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் இப்படி எல்லாம் செய்யாதீர்கள் எனக்கு படிக்கிற வேலை இருக்கு என கூறுகிறார். பார்த்திபன் முன்பெல்லாம் சைட்டுக்கு சென்றான் செங்கல், மண் போன்றவை தான் நினைப்பில் இருக்கும் ஆனால் தற்பொழுதெல்லாம் காவியா காவியா என்பது மட்டும் தான் நினைவில் இருக்கிறது என கூறுகிறார்.
சாப்பிடு சென்ற நேரத்தில் காவியாவை சாப்பிட அழைத்த நிலையில் நான் அப்புறம் சாப்பிட்டுக் கொள்கிறேன் என கூறுகிறார் பிறகு பார்த்திபன் தனது அம்மா,அப்பா, ப்ரியா ஆகியவர்களுடன் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார். இந்நேரத்தில் ஜீவா வர பின்னாடி தனது கையில் வைத்திருப்பதை மறைக்கிறார்.
அதனைப் பார்த்த அவருடைய அப்பா கூப்பிட்டு அதனை வாங்கி பார்க்கும் பொழுது அதில் மல்லிகை பூ, அல்வா போன்றவை இருக்கிறது. இதனை பார்த்ததும் அனைவரும் சிரிக்க ப்ரியா நான் சொல்லாமலே வாங்கிட்டு வந்து இருக்காரு என நினைத்து மகிழ்ச்சியடைகிறார். பார்த்திபனை அவருடைய அப்பா கலாய்க்க நானும் போய் மல்லிகை பூவும், அல்வாவும் வாங்கிட்டு வந்து காவியாவுக்கு தருவேன் பாருங்க என கூறிவிட்டு கிளம்புகிறான் இதுதான் இன்றைய எபிசோடு ஒளிபரப்பாக இருக்கிறது.