பார்த்திபன், காவியாவின் கையைப் பிடித்து பார்த்து உங்களுக்கு ஆறு குழந்தைகள் என்று கூறிய சாமியார்.! நடு ரோட்டில் மயங்கி விழுந்த ஜீவாவின் அம்மா..

eramana-rojave-kaviya
eramana-rojave-kaviya

முதல் சீசன் வெற்றிகரமாக முடிந்த நிலையில் இரண்டாவது சீசனையும் ஒளிபரப்பி அறிமுகமான சில காலகட்டத்திலேயே ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்துள்ள சீரியல் தான் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும்  ஈரமான ரோஜாவே 2. ஜீவா மற்றும் பிரியாவின் ஜாதகம் நன்றாக இருக்கும் நிலையில் பார்த்திபன் மற்றும் காவியா இருவரும் சேரவே முடியாது என்று ஜோசியர் கூறியுள்ளார்.

சுத்தமாக பொருத்தம் இல்லை என்று கூறியதால் இவர்கள் சேர்ந்து வாழ்வதற்கு ஏதாவது பரிகாரம் இருந்தால் சொல்லுங்கள் என்று பார்த்திபனின் அம்மா கேட்க அவர் முருகன் கோயிலுக்கு நடந்து செல்ல வேண்டும் என்று கூறுகிறார். அதனை காவியாவை செய்ய சொல்ல காவியா முடியாது என்று கூறியதால் பார்த்திபனின் அம்மா தனியாக பாத யாத்திரை செல்கிறார்.

இப்படிப்பட்ட நிலையில அவர் இன்று கோவிலுக்கு வந்துவிடுவார் என்பதற்காக ஜீவா அம்மாவை பார்ப்பதற்காக கிளம்புகிறார். இதனைப் பார்த்த ப்ரியா நானும் வரலாமா என்று கேட்க பிறகு பார்த்திபன்,  காவியா, ஜீவா என அனைவரும் செல்கிறார்கள்.

கோவிலுக்கு போக இளநீர் குடித்துவிட்டு கோவிலில் உள்ளே போவதற்காக படிக்கட்டின் இருக்கிறார்கள். அப்பொழுது சாமியார் ஒருவர் இவர்களை அழைத்து தங்கள் பக்கத்தில் உட்கார வைக்கிறார் பார்த்திபன் மற்றும் காவியா இருவரின் கையவும் பிடித்து பார்த்து உங்களுக்கு மூஞ்சி பொண்ணு, மூன்று பையன் குழந்தைகள் பிறப்பார்கள் என்று கூற உடனே பார்த்திபன் மிகவும் மகிழ்ச்சியடைகிறார்.

இவர்களைத் தொடர்ந்து ஜீவா, பிரியா இருவரின் கையை பார்த்து கூற உடனே ப்ரியா எங்களுக்கு எத்தனை பிள்ளைகள் என்று கேட்கிறார் உடனே சாமியார் உங்களுக்கு வேண்டியதை மனதை நினைத்து வேண்டிக்கொண்டே படிக்கட்டுகளை ஏறுங்கள் அங்கு போய் என் அப்பனை தரிசனம் செய்யுங்கள் நினைத்ததை அனைத்தும் நடக்கும் என்று கூறுகிறார்.

மேலும் பார்த்திபன் மகிழ்ச்சியில் வேண்டிக்கொண்டே படிக்கட்டுகளை எரிகிறார்.  இப்படிப்பட்ட நேரத்தில் பார்த்திபனின் அம்மா நடுரோட்டில் மயங்கி விழிக்கிறார் இதுதான் இன்றைய எபிசோடில் ஒளிபரப்பாக இருக்கிறது.