விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. அந்த வகையில் முதல் சீசன் நல்ல வரவேற்பினை பெற்று பெற்று விட்டால் அதனை இரண்டாவது சீசன் ஒரு பரப்புவதையும் வழக்கமாக வைத்திருக்கிறார்கள் அந்த வகையில் இரண்டாவது சீசனையும் அறிமுகப்படுத்தி அறிமுகமான சில காலங்களிலேயே ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து டிஆர்பி-யில் முன்னனிடத்தை பிடித்த சீரியல் தான் ஈரமான ரோஜாவே 2.
இந்த சீரியல் நடித்து வரும் அனைத்து கேரக்டர்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. முதல் சீசனை நடித்த திரவியம் மற்றும் தற்பொழுது வெற்றி கதாபாத்திரத்தில் நடித்த வருகிறார் மற்ற அனைத்து நடிகர்களும் புதிதாக அறிமுகமாகியுள்ளார்கள். பிரியா ஜீவாவை காதலிக்க ஆரம்பித்துள்ள நிலையில் ஜீவாவின் மனதை மாற்ற வேண்டும் என்பதற்காக பல முயற்சிகளை செய்து வருகிறார். மேலும் ஜீவவும் ஓரளவிற்கு தனது மனதை மாற்றி வருகிறார்.
ஆனால் பார்த்திபன் காவியாவை ஏற்றுக் கொண்டாலும் காவியா இன்னும் ஆறு மாதம் கழித்து நம்ம பிரிந்து விடுவோம் என்று கூறி வருகிறார். பார்த்திபனம் எவ்வளவு முயற்சி செய்தாலும் காவியா மாறுவதாக தெரியவில்லை. ஆனால் எப்படியாவது மாற்றி விட வேண்டும் என்று நினைத்து வருகிறார்.
இப்படிப்பட்ட நிலையில் இன்றைய எபிசோடில் பிரியா ஜீவாவிற்காக குலோப் ஜாமுன் செய்து எடுத்து வந்து ஊட்டி விடுகிறார். மேலும் ஜீவா சாப்பிட்ட மீதியை நான் சாப்பிட்டு விடுகிறேன் என்று கூறுகிறார். பிறகு பார்த்திபன் காவியாவும் சேரவே முடியாது என்ற ஜோசியர் கூறிவிட்டார் இவர்கள் சேர வேண்டும் என்பதற்கான பரிகாரத்தை காவியா செய்ய முடியாது என்று கூறியதால் அத்தை செய்றாங்க என்று கூறுகிறார்.
இதனைத் தொடர்ந்து பார்த்திபன் காவியாவை பார்த்து சீக்கிரம் நீ மாறிடுவாய் என்று மனதிற்குள் நினைக்கிறார். பிறகு மறுநாள் பார்த்திபனின் அம்மா பரிகாரம் செய்வதற்காக கிளம்புகிறாரா ஆனால் காவியா எழுந்திருக்கவில்லை தூங்கிக் கொண்டிருப்பதால் அனைவரும் பார்த்திபனிடம் காவியாவை அழைத்து வருமாறு கூறுகிறார்கள்.
பிறகு காவ்யாவும் வந்து பார்த்திபனிடம் அத்தை இதுபோன்று செய்வது எனக்கு கவலையாக இருக்கிறது என்று கூறுகிறார் நீ செய்யவில்லை என்ற காரணத்தினால் தான் என்னுடைய அம்மா இந்த பரிகாரத்தை செய்றாங்க என்று இன்னும் ஆறு மாதம் கழித்து நம்ம பிரிந்து விடுவோம் என்னிடம் இருந்து வேறு எதையும் எதிர்பார்க்காதீர்கள் என்று கூறுகிறார்.