பார்த்திபனுக்கு வாட்சைப் பரிசளித்த காவியா.! வருத்தத்தில் ஜீவா.. ஈரமான ரோஜாவே 2 இன்றைய எபிசோட்.

eramana-rojave-2-serial-1
eramana-rojave-2-serial-1

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய சீரியல்களில் ஒன்றுதான் ஈரமான ரோஜாவே  2. இந்த சீரியல் அறிமுகமான சில காலகட்டத்திலேயே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது. மேலும் இந்த சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருவதால் தொடர்ந்து பல சுவாரசியமான காட்சிகளும் இடம் பெற்று வருகிறது.

பார்த்திபன் எப்படியாவது காவியாவின் மனதை மாற்ற வேண்டும் என பல முயற்சிகளை செய்து வருகிறார். இதனைத் தொடர்ந்து  பிரியாவும் ஜீவாவிற்கு பிடித்ததெல்லாம் ஜீவாவின் மனதில் இடம் பிடிக்க வேண்டும் பலவற்றை செய்து வருகிறார்.

ஜீவாவிற்கும் பிரியாவை பிடிக்க ஆரம்பித்துள்ளது. இன்று வெளியாகி உள்ள ப்ரோமோவில்  பார்த்திபன் காவியாவை அழைத்துக் கொண்டு எக்ஸாம் எழுதும் இடத்திற்கு செல்கிறார்கள்.  காவியா எக்ஸாம் நல்லா எழுதி இருப்பதாக கூறுகிறார்.

பிறகு பார்த்திபன் மகிழ்ச்சியடைகிறார்.  வீட்டிற்கு கிளம்பலாமா என பார்த்திபன் கூற வேண்டாம் மாலுக்கு போலாம் என்று காவியா கூறுகிறார். மாலுக்கு போனதும் வாட்ச் ஒன்றை எடுத்து பார்த்திபனுக்கு பரிசாக வழங்குகிறார். உடனே பார்த்திபன் மிகவும் மகிழ்ச்சியடைந்து தனது அம்மாவிடம் போன் செய்து இதனை கூறுகிறார்.

இதனை தெரிவித்துக் கொண்ட பிரியா மிகவும் மகிழ்ச்சி அடைகிறாள்.  உடனே ஜீவாவிற்கு பிடித்ததை எல்லாம் சமைக்கிறார் அதோடு கலக்கியும் செய்து தருகிறார் ஒன்று சாப்பிட்டது பத்தவில்லை என்று இரண்டாவது முறையும் செய்து எடுத்து வருகிறார். எனக்கு ஜீவாவிடம் நான் ஏன் இவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்று உங்களுக்கு தெரியுமா.? என்று கேட்க,

உடனே ப்ரியா பார்த்திபனுக்கு காவியா வாட்ச் ஒன்றை பரிசாக கொடுத்தாலாம் சீக்கிரம் காவியா மனதை மாற்றிக் கொள்வார் மகிழ்ச்சியாக வாழலாம் என்று கூறுகிறார்.  இதனைக் கேட்டதும் ஜீவாவிற்கு என்ன செய்வது என்று தெரியாமல் சிரிப்பது போல் நடிக்கிறார்.