விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துவரும் நிலையில் அறிமுகமான காலகட்டத்தில் இருந்து தற்பொழுது வரையிலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் சீரியல்களில் ஒன்றுதான் ஈரமான ரோஜாவே 2.
இந்த சீரியலின் ஹீரோவாக திரவம் மற்றும் ஹீரோயினாக கெப்ரில்லா நடித்த வருகிறார். ஈரமான ரோஜாவே சீரியலின் முதல் சீசனில் ஹீரோவாக திரவம் நடித்திருந்தார் இதனை தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிரபல ரியாலிட்டி ஷோவில் பங்கு பெற்று வந்த கேபரில்லா முதல் முறையாக கதாநாயகியாக சின்னத்திரைக்கு அறிமுகமானார்.
பலரும் நடித்து வரும் இந்த சீரியலில் ஜோடிகள் மாற்றி திருமணமான நிலையில் தற்போது பல திருப்பங்கள் இருந்து வருகிறது. அந்த வகையில் ஜீவா பிரியாவை ஏற்றுக் கொள்ள ஆரம்பித்துள்ள நிலையில் இருவரும் ரொமான்ஸ் செய்யவும் ஆரம்பித்து இருக்கிறார்கள்.
ஆனால் பார்த்திபன் மற்றும் காவியா இருவரும் நீங்க இருந்து வருகிறார்கள் பார்த்திபன் காவியா காதலித்து வந்தாலும் காவியா எப்படியாவது விவாகரத்து பெற்று இங்கிருந்து போய் விட வேண்டும் முடிவில். இந்நிலையில் இன்றைய எபிசோடில் காவியா மற்றும் பார்த்திபன் பாத்ரூமில் தண்ணீர் வராத காரணத்தினால் காவியா பிரியாவின் பாத்ரூமில் குளித்துவிட்டு வருகிறார்.
அந்த நேரத்தில் ஜீவாவும் வர இருவரும் தெரியாது தனமாக மோதி கொள்கிறார்கள்.இதனைத் தொடர்ந்து துணி துவைப்பதற்கான வாஷிங் மெஷின் ஓடாத காரணத்தினால் பார்த்திபன் காவியாவின் புடவை முதல் ஜாக்கெட் வரை அனைவரையும் துவைத்து தருகிறார். இதனை பார்த்த பார்த்திபனின் அம்மா இப்படியே போயிட்டு இருந்தா என்ன பண்ணுவது என வருத்தப்படுகிறார்.
பிறகு ஜீவா சைட்டில் வேலை செய்து கொண்டிருக்கும் பொழுது அவருடைய அத்தை காரில் வருகிறார் அப்பொழுது பிரியாவை கடத்திய ரவுடியும் அந்த காரில் உட்கார அவருக்கு இரண்டு கட்டு பணத்தை ஜீவாவின் அத்தை தருகிறார். இதனைப் பார்த்த ஜீவா சந்தேகத்துடன் வீட்டிற்கு வர பிரியாவிடம் இதனைப் பற்றி கூறுகிறார் .
பிறகு எனக்கும் டவுட்டாக தான் இருக்கிறது என பிரியா கூறியதோடு இன்றைய எபிசோடு முடிகிறது. இவ்வாறு இதன் மூலம் கண்டிப்பாக அடுத்ததாக ஜீவாவின் அத்தை பிரியாவை கடத்திய அந்த ரவுடிக்கும் அத்தைக்கும் ஏதோ சம்பந்தம் இருக்கிறது என கண்டுபிடிப்பார்.