விஜய் டிவியில் சமீபத்தில் அறிமுகமாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் சீரியல் தான் ஈரமான ரோஜாவே 2. இந்த சீரியலில் எதிர்பாராத ட்விஸ்டுகள் இருந்து வருவதால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.அந்த வகையில் தற்பொழுது காவியா திருமணத்திற்கு முன்பு வேறு ஒருவரை காதலித்து வந்துள்ளார் என்பதை தெரிந்து கொண்ட பார்த்திபனின் அம்மா பெரு மகிழ்ச்சியில் இருந்து வருகிறார்.
மேலும் இதனைப்பற்றி காவியாவிடம் கேட்கும் பொழுது உண்மைதான் நான் திருமணத்திற்கு முன்பு வேறு ஒருவரை காதலித்தேன் இப்படியெல்லாம் நடக்கும் என்று எனக்கு தெரியாது என்று கூறுகிறார். மேலும் பார்த்திபனின் அம்மா நீ எப்படி மனசில் ஒருவரை வைத்துக்கொண்டும் மற்றொருவருடன் வாழ்வை என்று கேட்கிறார்.
மேலும் வாழ்க்கை ஃபுல்லா இந்த விஷயம் உன்னை போட்டு கஷ்டப்படுத்திட்டே இருக்கமுல என்று கூறுகிறார். பிறகு நீ எனக்காக ஒன்று செய் என்று கூறிவிட்டு நீ பார்த்திபனிடம் இருந்து இப்ப இருக்கிறதை விட இன்னும் தள்ளிப்போ அவன் வாயாலேயே உன்னை வேண்டாம் என சொல்லவை எனக் கூறுகிறார்.
இப்படிப்பட்ட நிலையில் பிரியாவை மிரட்டுவது போல ரவுடி ஒருவர் புதிதாக அறிமுகமாகியுள்ளார். மேலும் அவர் ஜெயிலிலிருந்து தப்பித்த நிலையில் அந்த ரவுடி பிரியாவிற்கு போன் செய்து மிரட்டுகிறார் மேலும் அந்த ரவுடி போன் செய்ததிலிருந்து பிரியா எப்பொழுதும் போல இல்லை.
எனவே ஜீவா தொடர்ந்து அவரைப் பற்றி கேட்டு வருகிறார் உங்களுக்கு என்ன ஆனது என்று நீங்கள் என்னை அக்கறையாக பார்த்துக் கொள்வது போல் நானும் உங்களை அப்படி பார்த்துக் கொள்ள வேண்டும் எனக் கூறுகிறார். இருந்தாலும் பிரியா இன்னைப்பற்றி எதுவும் கூறாமல் இருந்து வருகிறார்.
இப்படிப்பட்ட நிலையில் இந்த வார எபிசோடில் ரவுடிகள் பிரியாவின் ஹோம்மில் இருக்கும் ஒரு குழந்தையை கடத்து விடுகிறார்கள் அந்த குழந்தையை தேடி இப்படியா கண்டுபிடிக்கிறார். பிறகு பிரியாவை கடத்தி விடுகிறார்கள் பிறவி இது அனைவருக்கும் தெரிய வர ஜீவா என அனைவரும் பிரியாவை தேடி வருகிறார்கள்.