காவியாவை வேறு ஒரு திருமணம் செய்துக்கொள்ள சொல்லும் பார்த்திபனின் அம்மா.! ஜிவாவிடம் அந்த நபரை பற்றி கூற முடியாமல் தவிக்கும் ப்ரியா..

eramana-rojave-2-14
eramana-rojave-2-14

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியல்களில் ஒன்றுதான் ஈரமான ரோஜாவே 2.இந்த சீரியல் மிகவும் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் தற்பொழுது பார்த்திபனின் அம்மா தனது தோழியின் வீட்டு ஃபங்ஷனுக்கு செல்கிறார்.

அங்க அவருடைய தோழி காவியாவை ஒரு பையனுடன் ஹோட்டலில் பார்த்ததாகவும் திருமணத்திற்கு முன்பு வேறு ஒரு பையனை காவியா காதலித்ததாகவும் கூறுகிறார்.பிறகு பார்த்திபனின் அம்மா வீட்டிற்கு வந்தவுடன் இதனைப் பற்றி காவியாவிடம் கேட்கலாமா என யோசித்துக் கொண்டிருக்கிறார்.

பிறகு காவியாவை தனியாக அழைத்து நீ திருமணத்திற்கு முன்பு வேறு ஒருவரை காதலிச்சியா என்று கேட்க அதற்கு காவியா கையெழுத்து கும்பிட்டு ஆமா அத்த நான் ஒரு பையனை காதலிச்சேன் அதனைப் பற்றி யாரிடமும் சொல்லாம மனசுக்குள்ளே போட்டு தற்போது புழங்கி வருகிற என்ன அழுகிறார்.

உடனே பார்த்திபனின் அம்மா என்ன சொல்வதென்று தெரியாமல் அப்ப நான் உங்களுடைய வாழ்க்கை என்னாவது நீங்க ரெண்டு பேரும் சந்தோஷமாக வாழ முடியாது வாழ்க்கை ஃபுல்லா உன் மனசில இந்த வேதனை இருந்து கொண்டே இருக்கும் பேசாம நீ அந்த பையன் கல்யாணம் செஞ்சுக்க என்று கூறுகிறார்.

காவியா என்ன சொல்றது என்று தெரியாமல் அப்படியே நிற்கிறார். இதனை தொடர்ந்து பிரியாவை ஒரு நபர் போன் செய்து மிரட்டு நிலையில் அவர் ஜீவாவிடம் சொல்ல போன் செய்கிறார் ஆனால் சொல்ல முடியாமல் போன கட் பண்ணி விடுகிறார். பிறகு மனதிற்குள்ளேயே சாரி ஜிவா என்னால் உங்களிடம் சொல்ல முடியலை என்று கூறுகிறார்.