ஈரமான ரோஜாவே 2 சீரியலில் புதிதாக என்ட்ரி கொடுத்துள்ள புதிய நபர்.! ப்ரியாவிற்கும் அவருக்கும் என்ன சம்பந்தம்..

ERAMANA-RTOJAVE-13
ERAMANA-RTOJAVE-13

விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் ஏராளமான சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது அந்த வகையில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வரும் சீரியல்களில் ஒன்றுதான் ஈரமான ரோஜாவே 2. இந்த சீரியல் நடித்து வரும் அனைத்து கேரக்டர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருவதால் எளிதில் டி.ஆர்.பி-யில் இடம்பிடித்தது.

இந்நிலையில் தற்பொழுது ஏராளமான டிவிஸ்டுகள் இருந்து வருகிறது. அதாவது தற்போது தான் பார்த்திபன் மற்றும் காவியா இருவரும் சேர்வதற்கு வாய்ப்பே இல்லை என்று சாமியார் கூறியதால் பார்த்திபனின் அம்மா அந்த வேண்டுதலை நிறைவேற்ற முருகன் கோவிலுக்கு பாதயாத்திரை சென்றார்.

அது முடிந்த நிலையில் காவியா மற்றும் பார்த்திபன் இருவரையும் பார்த்த சாமியார் ஒருவர் உங்களுக்கு மூன்று குழந்தைகள் பிறக்கும் என்றும் பிரியா மற்றும் ஜீவா இருவருக்கும் இரட்டை குழந்தைகள் பிறக்கும் என்று கூறினார். இதனால் பார்த்திபன் மற்றும் ப்ரியா வரும் மகிழ்ச்சியில் இருந்து வருகிறார்கள்.

இப்படிப்பட்ட நிலையில் வேண்டுதல் முழுவதும் முடிந்ததும் பார்த்திபனின் அம்மா வீட்டிற்கு வந்து விட்டார். வந்தவுடன் அவருடைய தோழி ஒருவர் தனது வீட்டில் ஒரு பங்க்ஷன் இருப்பதாகவும் கண்டிப்பாக வந்து விட வேண்டும் என்றும் கூறுகிறார்.

இவ்வாறு பேசிக் கொண்டிருக்கும் பொழுது காவியாவை பார்த்து விடுகிறார்.  பிறகு அந்த பங்க்ஷன் இருக்கு சென்ற பொழுது பார்த்திபனின் அம்மாவிடம் உன்னுடைய மூத்த மருமகள் திருமணத்திற்கு முன்பு வேறு ஒரு பையனுடன் நான் ஹோட்டலில் பார்த்தேன் அவள் வேறு யாரையோ காதலித்தார் என்று கூறுகிறார்.

உடனே வீட்டிற்கு வந்த பார்த்திபனின் அம்மா காவியா வைத்து தனியாக அழைத்து சென்று நீ திருமணத்திற்கு முன்பு யாரையாவது காதலிச்சியா என்று கேட்கிறார். காவியா என்ன சொல்வதென்று தெரியாமல் முழிக்கிறார். இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது புதிதாக ஒருவர் ப்ரியாவிற்கு போன் பேசுகிறார் அவரிடம் பிரியா உன்னால் என் வாழ்க்கையில் என்னென்னமோ ஆயிடுச்சு,  வேண்டாம் விடு நீ செய்த தப்புக்கு ஜெயிலில் இருக்கிறது தான் சரி என்று கூறுகிறார்.

அதற்கு அவர் என்ன ப்ரியா உனக்காக எவ்வளவு ரிஸ்க் எடுத்து ஜெயில்ல இருந்து தவிச்சிருக்கேன் மறுபடியும் நீ சரண்டர்ராக சொல்ற சத்தியமா முடியாது ப்ரியா என்று கூறுகிறார். அந்த நபர் யார்.? ப்ரியாவிற்கும் அவருக்கும் இடையே என்ன பிரச்சனை என்பதை இனிவரும் எபிசோடுகளில் தெரியவர இருக்கிறது.