காவியா காதலித்ததை பார்த்திபனின் அம்மாவிடம் போட்டு கொடுத்த தோழி.. என்ன சொல்வதென்று தெரியாமல் முழிக்கும் காவியா.! ஈரமான ரோஜாவே 2 சீரியல் இன்றைய எபிசோட்..

roja-sun-tv
roja-sun-tv

தற்பொழுது விஜய் டிவியில் மிகவும் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல்களில் ஒன்றுதான் ஈரமான ரோஜாவே 2. முதல் சீசன் வெற்றி பெற்ற நிலையில் இரண்டாவது சீசனம் அறிமுகமான சில காலங்களிலேயே ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்துள்ளது. மேலும் இந்த சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருவதால் தொடர்ந்து வித்தியாசமான எபிசோடுகளை ஒளிபரப்பி வருகிறார்கள்.

அந்த வகையில் பிரியா தொடர்ந்து ஜீவாவை மாற்ற வேண்டும் என்பதற்காக பல முயற்சிகளை செய்து வருகிறார்.மேலும் ஜீவாவின் மீது தனது முழு அன்பையும் வெளிப்படுத்தி வருகிறார். இந்நிலையில் இவர்களைப் போலவே காவியா மற்றும் பார்த்திபன் இருவரும் ஒன்று சேர வேண்டும் என்பதற்காக சாமியார் ஒருவரிடம் ஜாதகம் பார்க்கிறார்கள்.

அவர் இவர்கள் சேர்வதற்கு வாய்ப்பே இல்லை என்று கூறியதால் அதற்காக பரிகாரம் ஏதாவது இருந்தால் கூறுங்கள் என்று கேட்கிறார் அதற்கு அவர் முருகன் கோவிலிற்கு பாதயாத்திரை செல்ல வேண்டும் என்று கூறுகிறார். பிறகு காவியாவை இந்த பரிகாரத்தை பார்த்திபனின் அம்மா செய்ய சொல்கிறார்.

ஆனால் காவியா இதனை என்னால் செய்ய முடியாது என்று கூறியதால் பார்த்திபனின் அம்மாவே இதனை செய்கிறார். பிறகு பாதயாத்திரை நடந்து கொண்டிருக்கும்பொழுதே நடுரோட்டில் மயங்கி விழுந்து விடுகிறார். பார்த்தவர்கள் இவரை எழுத்ததும் மீண்டும் பாதயாத்திரை நடந்து செல்கிறார்.

கோவிலில் உள்ள படிக்கட்டுகளில் ஏற முடியாமல் ஏறிக் கொண்டிருக்கிறார் இதனைப் பார்த்த ஜீவா பார்த்திபன் அனைவரும் மூடி அவரை கோயிலுக்குள் அழைத்து செல்கிறார்கள். பிறகு பரிகாரம் முடிந்ததும் சாமியார் நான்கு கயிறுகளை தருகிறார்.

அதனை பார்த்திபனின் அம்மா அனைவருக்கும் கட்டி விடுகிறார். பிறகு வீட்டிற்கு வந்ததும் இதனை நினைத்து காவியா வருத்தப்படுகிறார் மேலும் உங்களைப் போல ஒரு அத்தை எனக்கு கிடைக்க மாட்டார் எதனை எப்படி உங்களிடம் கூற போகிறேன் என்று மனதிற்குள் நிற்கிறார்.

இப்படிப்பட்ட நிலை பார்த்திபனின் அம்மா தனது தோழியின் வீட்டு ஃபங்சனுக்கு செல்கிறார். அங்கு அவருடைய தோழி உன்னுடைய மூத்த மருமகள் திருமணத்திற்கு முன்பு வேறு ஒருவரை காதலித்தார் நான் நேரில் பார்த்திருக்கிறேன் என்று சொல்ல உடனே வீட்டிற்கு வந்ததும் காவ்யாவை தனியாக அழைத்துச் சென்று கல்யாணத்திற்கு முன்பு யாரையாவது காதலிச்சியா என தொடர்ந்து கேட்டுக் கொண்டிருக்கிறேன் என்ன சொல்வது என்று தெரியாமல் முழித்து கொண்டிருக்கிறான்.