விஜய் டிவியில் சமீபகாலமாக ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களிலும் ஏராளமாக டுவிஸ்ட்கள் இருந்து வருகிறது.அந்த வகையில் முதல் சீசன் அமோக வரவேற்பை பெற்ற நிலையில் 2-வது சீசன் அறிமுகமான காலகட்டத்தில் இருந்து டிஆர்பி-யில் இடத்தை பிடித்து தற்போது நல்ல வரவேற்பு பெற்று வருவதோடு மட்டுமல்லாமல் விஜய் டிவி டிஆர்பி முன்னணி இருப்பதற்கு உறுதுணையாக ஈரமான ரோஜாவே சீரியல் இருந்து வருகிறது.
இந்த சீரியலில் முதல் சீசனில் இருந்த திரவியத்தை மட்டும் வைத்துக் கொண்டு மற்ற அனைத்து நடிகர் நடிகைகளையும் புதிதாக அறிமுகப்படுத்தி உள்ளார்கள். அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ஜோடி நிகழ்ச்சியின் மூலம் டான்ஸ் போட்டியாளராக கலந்து கொண்டு தற்போது சின்னத்திரையில் நடித்து வரும் கேப்ரில்லா காவியா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இவரை தொடர்ந்து மற்ற சின்னத்திரை நடிகர் நடிகைகளை அறிமுகப்படுத்தி உள்ளார்கள். இந்த சீரியல் அண்ணனுக்கு என்று பார்த்து வைத்த பெண்ணை தம்பிக்கும், தம்பி காதலித்து வந்த பெண்ணை அண்ணனும் எதிர்பாராத சில பிரச்சனைகளால் திருமணம் செய்து கொள்கிறார்கள்.
திருமணத்திற்குப் பிறகு அந்த வாழ்க்கையை ஏற்றுக் கொள்ள முடியாமல் தவித்து வருகிறார்கள். இப்படிப்பட்ட நிலையில் காவியாவிற்கு அவரின் கணவர் சில சப்ரைஸ்களை தருகிறான் ஆனால் எதற்காக ஜீவாவை மறக்க முடியாமல் புலம்பி வருகிறார்.
அப்படிப்பட்ட நிலையில் புதிதாக இவர்களுக்கு திருமணமாகி உள்ளதால் தாலி கட்டும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது அது எங்கே என்று கேட்டதற்கு எந்த பதிலும் கூறாமல் இருந்து வருகிறார். எனவே உனக்கு பார்த்திபனை பிடிக்கவில்லை தானே உண்மையை சொல்லு என்று கேட்கிறார்கள்.
இது ஒரு புறமிருக்க மற்றொரு பக்கம் காவியாவின் அக்கா பிரியா ஒரு ஜோடியை கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைத்த அப்பா அம்மாவின் மீது கேஸ் போட்ட அதோடு மட்டுமல்லாமல் அவர்கள் இருவரையும் பிரித்து வைத்து விட்டார். எனவே காவியாவின் அம்மா போன் செய்து புலம்புகிறார் ஏனென்றால் கட்டாய கல்யாணம் பண்ணி வைத்த இவர்களையும் பிரித்து குடும்பத்தை சின்னாபின்னமாக விடுவாரோ என்று பயப்படுகிறாள்.