விஜய் டிவியில் தொடர்ந்து பல வருடங்களாக தொகுப்பாளினியாக பணியாற்றி வந்து இறுதியில் ஒட்டுமொத்த ரசிகர்களையும் தனது பேச்சுத் திறமையினால் கவர்ந்தவர் தான் தொகுப்பாளினி டிடி என்கின்ற திவ்யதர்ஷினி. இவர் விஜய் டிவியின் செல்லப்பிள்ளையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
திவ்யதர்ஷினி தனது பள்ளிப் பருவத்திலிருந்தே தொகுப்பாளராக பணியாற்றி ஆரம்பித்துவிட்டார். அந்தவகையில் பாய்ஸ் vs கேல்ஸ், ஜோடி நம்பர் 1,சூப்பர் சிங்கர் என ஏராளமான நிகழ்ச்சிகளை தொடர்ந்து தொகுத்து வழங்கி வந்த சின்னத்திரையின் ஒரு அங்கமாக திகழ்ந்தார்.
இவ்வாறு ரசிகர்கள் மனதை வெகுவாக கவர்ந்த இவர் தற்பொழுது வரையிலும் இவருக்கென்று ரசிகர்கள் மத்தியில் ஒரு மவுசு இருந்து வருகிறது. அதுவும் முக்கியமாக இவர் மிகப் பெரிய அளவில் பிரபலமடைய வைத்த நிகழ்ச்சி என்றால் அது காப்பி வித் டிடி என்ற நிகழ்ச்சிதான்.
இந்நிகழ்ச்சியின் மூலம் ஏராளமான முன்னணி நடிகர் நடிகைகளை நேரில் சந்தித்து ரசிகர்கள் விரும்பும் அனைத்து கேள்விகளையும் கேட்டு பிரபலமடைந்தார். அந்த வகையில் விஜய் டிவியின் மாபெரும் வெற்றியடைந்த இந்நிகழ்ச்சியாக இது இருந்து வந்தது.
இதனைத் தொடர்ந்து அச்சம்,தவிர் அன்புடன் டிடி,என்கிட்ட மோதாதே, ஸ்பீட் கெட் செட் என பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார்.இவ்வாறு மிகவும் ஆக்டிவாக இருந்து வந்த இவர் சில காலங்களாக திரைப்படங்களிலும் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
அதோடு சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வந்த இவர் சமீபத்தில் துபாய்க்கு சுற்றுலா சென்றுள்ளார்.அங்கு பல இடங்களுக்கு சென்று இவர் ஏராளமான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்தார் இப்படிப்பட்ட நிலையில் தற்போது இவரின் சம்பளத்தை பற்றிய தகவல் வெளிவந்துள்ளது.
இந்நிலையில் இவர் இதுவரையிலும் விஜய் டிவியை தவிர மற்ற எந்த தொலைக்காட்சி பணியாற்றியதில்லை எனவே தொகுப்பாளினியாக டிடி ஒரு எபிசோடுக்கு 3 லட்சம் முதல் ரூபாய் 4 லட்சம் வரை சம்பளம் வாங்கி வருவதாக தகவல் வெளிவந்துள்ளது.